Aran Sei

பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படும் புலனாய்வுத் துறை – சிவசேனா குற்றச்சாட்டு

ன்றிய அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை ஆகியவை பாஜகவின் கிளைப் போன்று செயல்படுவதாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனா குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை தீவிரமாக செயல்படுவதாகவும் அந்தப் பத்திரிகையில் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, ஒன்றிய அரசின் நிறுவனங்களை அரசு தங்கள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தப் பயன்படுத்துகிறது என்றும் அந்த பத்திரிகைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “அமலாக்கத்துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் பாஜகவின் புதிய கிளைகளாக உள்ளது. கூடுதல் இயக்குனர் பொறுப்பில் உள்ள அமலாக்கத்துறை  அலுவலர் விரைவில் பாஜகவில் சேர உள்ளார். அவர் முக்கியமான பல விசாரணைகளை மேற்கொண்டார். இப்போது, ​​அவர் உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதன்வழியாக சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சராக பொறுப்பேற்பார். அமலாக்கத்துறைக்கு அரசியலோடு என்ன தொடர்பு?” என்றும் அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

source: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்