Aran Sei

சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட திட்டமில்லை – மாநிலங்களவையில் அமைச்சர் நித்யானந்த் பேச்சு

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளைத் தற்போது வெளியிட அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பானது ஊரக வளர்ச்சித்துறை, வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆகிய அமைச்சகங்களால் நடத்தப்பட்டது என்றும் மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு : பெரும்பான்மைச் சாதிகளுக்கு வலுக்கும் அதிகாரம் – ஸ்டாலின் ராஜாங்கம்

மேலும், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலின் முடிவுகளில் சாதி தவிர்த்த புள்ளிவிவரங்கள் கொண்ட முடிவுகள் தயாராக இருக்கிறது என்றும் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள நித்யானந்த் ராய், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பெறப்பட்ட சாதி சார்ந்த புள்ளிவிவரங்கள், மத்திய சமூகநீதி துறைக்கு அட்டவணைப்படுத்துதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தற்போது பொதுவெளியில் வெளியிட எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பா? வதந்திகளை நம்ப வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம்

இந்திய விடுதலைக்கு பிறகு சாதி ஒழிப்பு கொள்கை முடிவாக எடுத்துக்கப்பட்டது எனினும்  அரசியல் சாசன உத்தரவு, 1950 ன் படி பட்டியல் இனத்தவர்களின் சாதி பெயர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 2019 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE: PTI

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்