Aran Sei

சொமோட்டோ, ஸ்விகி செயலிகள் நடுநிலையாக செயல்படுகிறதா? – விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் முடிவு

Credit: The Wire

ணவு விநியோக நிறுவனங்களான சொமோட்டோ, ஸ்விகி நிறுவனங்களின் செயலிகள் நடுநிலையாக செயல்படுகிறதா? என்று விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) முடிவு செய்துள்ளது.

செயலிகளில் பிரத்யேக ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நடுநிலைத்தன்மையை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய போட்டி நிறுவனத்திடம் இந்திய தேசிய உணவகங்கள் சங்கம் (என்ஆர்ஏஐ)  கோரியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கிரிமினல் குற்றவாளிகளின் உடல், உயிரியல் மாதிரிகளை சேகரிக்கும் மசோதா நிறைவேற்றம் – தனியுரிமைக்கு எதிரானது என மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

“சொமோட்டோ, ஸ்விகி நிறுவனங்களுக்கு இடையில் நிலவி வரும் போட்டி கூட, நடுநிலைதன்மையுடன் செயல்படாததற்கு காரணமாக இருக்கலாம்,” சிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்களை உறுப்பினர்களாக கொண்ட என்ஆர்ஏஐ, “சொமோட்டோ, ஸ்விகி நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்துகின்றன. உணவகங்களிடம் இருந்து அதிகப்படியான கமிஷன் வசூலிப்பதோடு, பெரிய அளவில் தள்ளுபடிகளை வழங்குகின்றனஎன குற்றம்சாட்டியுள்ளது.

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

ஸ்விகி, சொமோட்டோ நிறுவனங்களின் செயலிகள் நடுநிலைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ள சிசிஐ, தாமதமாக பணம் செலுத்துதல், ஒருதலைபட்சமான விதிகள், கூடுதல் விதிகள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து அறிந்து கொள்ள அனுப்பட்ட மின்னஞ்சலுக்கு ஸ்விகி, சொமோட்டோ நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை.

Source: Reuters

வன்னியர்களுக்கான 10.5 இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து வன்னியர் சங்க கூட்டமைப்புகளின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி நேர்காணல். 

பார்க்க லிங்கை கிளிக் செய்யவும் 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்