Aran Sei

2021- 22 ஆம் கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறைக்கப்படாது- மத்திய மேல்நிலை கல்வி வாரியம் அறிவிப்பு

2021-22 ஆம் கல்வி ஆண்டில் 9 – 12 ஆம் வகுப்புவரை பாடத்திட்டம் குறைக்கப்படாது என மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.

சென்ற கல்வியாண்டில் (2020-21) கொரோனாவினால் பள்ளிகள் மூடப்பட்டதால் 30விழுக்காடு பாடங்கள் பாடத்திட்டத்தில் இருந்து குறைக்கப்பட்டிருந்தது.

தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

கடந்த மார்ச் மாதம் கொரனோ தொற்றின் காரணமாக நாடுமுழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன.இதன் காரணமாக இணையவழி கற்றல் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டன. மேலும், அதிகரிக்கும் கொரோனோ தொற்றால் சில மாநிலங்கள் இந்தக் கல்வி ஆண்டிலும் இணைய வகுப்புகளை அறிவித்துள்ளன.

ஆன்லைன் வகுப்புகளால் பெண்குழந்தைகள் படிப்பை இழக்கும் அபாயம்

இந்நிலையில் 2020-21ஆம் கல்வியாண்டில் 30விழுக்காடு குறைக்கப்பட்ட பாடங்கள் வரும் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் இடம்பெறும் என்று மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.

SOURCE: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்