Aran Sei

வாகனம் மோதி நீதிபதி கொல்லப்பட்டதாக புகார் – சி.பி.ஐ விசாரணைக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் உத்தரவு

ஜார்கண்ட் மாநிலத்தில் தணாபாத் மாவட்ட நீதிபதி வாகனம் மோதி இறந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 28 அன்று, தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது  டெம்போ வாகனத்தால் மோதப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில்  கொல்லப்பட்டார்.

பள்ளிகள் திறக்கப்படாததால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் கற்றல் திறன் – அறிவியலாளர்கள் முதமைச்சர்களுக்கு கடிதம்

இந்த விவகாரம்குறித்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், இது சுதந்திரமான நீதித்துறை மீது நடத்தப்பட்ட பரந்துபட்ட தாக்குதல் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,   தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் இறந்தது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த, அம்மாநில முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளதாக முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

கடந்த ஜூலை 29 அன்று  இந்த விவகாரம்   தொடர்பாகத் தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட  ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம், இது  நீதித்துறையின்  மீதான  தாக்குதல் என்று  குறிபிட்டிருந்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென, உச்ச நீதிமன்ற பார் சங்கத் தலைவர் விகாஸ் சிங் நோட்டீஸ் அனுப்பிருந்தார்.

source; the new indian express

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்