Aran Sei

நாரதா ஊழல் வழக்கு:  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 4 பேரை கைது செய்த சி.பி.ஐ

மேற்குவங்க மாநிலத்தில் நாரதா புலனாய்வு  லஞ்சப்புகார் வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 அமைச்சர் உட்பட நால்வரை மத்திய புலனாய்வு துறை கைது செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பாஜக 100 சீட் பெற்றால் தொழிலில் இருந்து விலக தயார் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

மாநில அமைச்சர்களான பிரஹட் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சட்டர்ஜி ஆகியோரை மத்திய புலனாய்வு துறை கைதுசெய்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட உடனேயே மத்திய புலனாய்வுத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குவங்க தேர்தல்: மத்திய பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், “நாங்கள் சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டுளோம், ஆனால் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

கடந்த மார்ச் 2017 அன்று, கொல்கத்தா உயர்நீதிமன்றம் நாரதா ஊழல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிட்டதாகவும், நாரதா லஞ்சப்புகார்  வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எண்ணற்ற அமைச்சர்களும், உறுப்பினர்களும் பணம் பெறும் காணொளி வெளியாகிருந்தாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்