Aran Sei

பசு கடத்தலில் ஈடுபட்ட பசு காவலர் – பஜ்ரங் தளத்தின் முன்னாள் நிர்வாகி கைது

credits : pti

கர்நாடக மாநிலம் உடுப்பியில், பசு காவலராகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்ட நபர் சட்டவிரோதமாக பசுக்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என கோஸ்டல் டைஜஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

மங்களூரின் ஹுட்கோ காலனியில் வசித்து வரும் முகமது யாசின் கால்நடைகளை திருடியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மாட்டுக்கறியை கடத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, முகமது யாசின், வீதியில் திரியும் மாடுகளை கடத்தி இறைச்சி கூடங்களுக்கு அனுப்பியதும், அனில் பிரபு எனும் நபருக்கு இதில் தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக லேட்ஸ்ட்லி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

மாடுகளை கடத்துவதிலும், மாட்டுக்கறியை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் காவல்துறையினரிடம் இருந்து தொந்தரவு எதுவும் வராமல் இருப்பதற்காக, இறைச்சி கூடங்கள் நடத்துபவர்களிடம் அனில் பணம் வாங்கியதாக யாசின் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாடுகளை கடத்திய வழக்கில், 45 வயதான அனில் பிரபு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவர் பஜ்ரங் தளத்தின் கர்கலா மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து கூறியுள்ள கர்நாடக மாநிலத்தின் பஜ்ரங் தளம் அமைப்பினர், பஜ்ரங் தளம் அமைப்புக்கும் அனில் பிரபுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கூறியதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா 2020, கர்நாடகாவின் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் முதம் ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்னும் மேலவையில் நிறைவேற்றப்படவில்லை.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

2017-ம் ஆண்டு மே மாதம், மாட்டிறைச்சி விற்பதற்கு தேசிய அளவில் மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இன்று, இந்தியாவில் பதினொன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லாத போதிலும், பல மாநிலங்களில் பசு, காளை, எருது, கன்று ஆகியவற்றின் இறைச்சியை விற்க/உண்ண தடை உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில், பசு வதைக்கு எதிரான சட்டங்களும், பசுக்காவல் அமைப்புகளும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்