Aran Sei

மாற்று சாதிப் பெண்ணை காதலித்த இளைஞர் அடித்துக் கொலை – பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது

ரூரில் நாவீதர் சமூகத்தைச் சேர்ந்த ஆண் வேறோரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் நடுரோட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் காதலி மீனாவின் தந்தை வேலன் உள்ளிட்ட உறவினர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் காமராஜபுரம் சாலையைச் சேர்ந்த 22 வயதான ஹரிஹரன், அந்தப் பகுதியில் முடி வெட்டும் தொழிலைச் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் மீனா என்ற பெண்ணும் அவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த பெண் ஹரிஹரனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நிலுவையில் உள்ள கொலை வழக்குகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து நேற்று முன் தினம், மீனாவின் குடும்பத்தினர் ஹரிஹரனை பேச வேண்டும் என அழைத்து, கரூர் பசுபதீஸ்வரர் கோயில் அருகே வரச்சொல்லி பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மீனாவின் பெரியப்பா சங்கர் என்பவர் ஹரிஹரனை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கோயிலுக்குச் சென்ற பெண் : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பூசாரி : உத்தர பிரதேசத்தில் கொடூரம்

ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹரிஹரன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த  தாக்குதல் நகரத்தின் மையப்பகுதியில் நடந்துள்ளது. காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் ஹரிஹரன் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் ஆணவக் கொலை – சாதி மாறி திருமணம் செய்ததால் கொடூரம்

கடந்த 6 ஆம் தேதி, மீனாவின் பெரியப்பா சங்கர், தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து இருந்த நிலையில், நேற்றைய தினம், மீனாவின் தந்தை வேலன் மற்றும் சித்தப்பா முத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயது கேரள இளைஞர் கொலை : ஆணவக்கொலையா என சந்தேகம்

இந்த சம்பவம் தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பு கள ஆய்வை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். “முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா” என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம் கசிந்து இறந்து போகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் – நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை : உச்சநீதி மன்றம் உத்தரவு

”கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீனாவின் தந்தை வேலன், பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து, தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 5 பேர் (ஹரிஹரன் தந்தை) ஜெயராமன் வீட்டிற்கு சென்று, உங்கள் மகனை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். நாவிதர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். உங்கள் சாதி என்ன எங்கள் சாதி என்ன? உங்கள் மகன் எங்கள் பெண்ணிடம் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று ‘எவிடன்ஸ்’ அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அக்கா என் பால்ய நினைவுகளின் அகராதி!” – கவிஞர் வெய்யில் 

மேலும் ”06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொது மக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்திருக்கிறது. சங்கர் ஆணவக்கொலை என்பது ஒரு கூலிப்படை வேகமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து இடத்தைவிட்டு கிளம்பினார். ஆனால் ஹரிஹரன் சுமார் 30 நிமிடம் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் காவல்நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். இரண்டு நிமிடத்தில் அந்த பகுதிக்கு வந்து அந்த இளைஞரை மீட்டிருக்க முடியும்” என்று ‘எவிடன்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா

”பெரும் கும்பலோடு ஒரு இளைஞரை தாக்குகின்ற போது, பொது மக்கள் அச்சமடைந்து தடுக்க வரமாட்டார்கள். இதனை உணர்ந்துதான் மீனாவின் குடும்பத்தினர் பெரும் இளைஞர் அடியாள் கும்பலோடு சேர்ந்து கொண்டு அந்த இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ள எவிடன்ஸ் அமைப்பு ”இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. காதலிக்கும் இளைஞரை பொது இடத்திற்கு வரவைத்து கல்லால் அடித்து கொல்வது என்பது நாகரீகமற்ற படுபாதக செயல். தமிழ்நாட்டில் இதுபோன்ற கலாச்சாரம் துவங்கியிருப்பது பெரும் ஆபத்து என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று அந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்