Aran Sei

பிகாரில் ஐந்து பேர் படுகொலை – முக்கிய குற்றவாளியை பாஜக அரசு காப்பாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டம் மதுப்பூர் கிராமத்தில் 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட ஆதிக்க சாதியினரை உள்ளூர் நிர்வாகமும், பாஜக அரசும் காப்பாற்றி வருவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 அன்று மதுப்பூர் கிராமத்தில் மீன்பிடி குளம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராவண் சேனா என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் அமைப்பினர் எல்லை பாதுகாப்புப்படை காவலர் உட்பட 5 பேரை படுகொலை செய்தனர்.

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் சரியாக கையாளப்படவில்லை – பீகார் காவல்துறை கூடுதல் இயக்குனர் அறிக்கை

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ராவண் சேனா அமைப்பின் தலைவர் பிரவின் ஜா உட்பட 5 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராவண் சேனா அமைப்பைச் சேர்ந்த 35 பேரின் மீது காவல்துறை வழக்குப் பதியப்பட்டுள்ளது. ராவண் சேனா அமைப்பைச் சேர்ந்த 35 பேரில் 18 பார்ப்பனர்களும், 13 ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும், மற்றவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும் உள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பற்றட்டுள்ளது.

பீகார் சட்டமன்றத்தில் காவல்துறை சிறப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு – தாக்கப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்தக் கொலையின் முக்கிய குற்றவாளியான பிரவீன் ஜா உட்பட குற்றம்சாட்டப்பட்ட பலரும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வினோத் ராஜன் ஜாவிற்கும் தொடர்புள்ளதாக இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கிய குற்றவாளியான பிரவீன் ஜாவை இந்த அரசு காப்பாற்ற முயல்வதாகவும் பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை – பீகார் நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை இந்தக் கொலையைச் சாதிப்படுகொலை இல்லை மீன்பிடிகுளத் தகராறில் ஏற்பட்ட மோதல் என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்