சென்னை ஐ.ஐ.டியின் இயக்குனராக பட்டியலின, பழங்குடியின அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களில் ஒருவரை நியமிக்க வேண்டுமென பேராசிரியர் விபின்.பி.வீட்டில் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பேராசிரியர் விபின் பி . வீட்டில் சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு நிலவுவதாகக் கூறி இணைப் பேராசிரியர் பணியிலிருந்து பதவி விலகினார்.
மேலும், தேசிய தொழிற்நுட்பக் கழகங்களில் நிலவும் சாதி பாகுபாடு குறித்து அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் அவர் குடியரசுத்தலைவருக்கு எழுதியுள்ளக் கடிதத்தில், கடந்த 1959 லிருந்து தற்போது வரை தேசிய தொழிற்நுட்பக் கழகங்களில் நியமிக்கப்பட்ட இயக்குனர்களில் பெரும்பான்மையாக பிராமணர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை சென்னை ஐ.ஐ.டியில் அதிகம் பிரதிபலிக்கிறது. இது இந்திய அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளது. என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி இயக்குனரின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் பட்டியலினம், பழங்குடியினம் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களில் ஒருவரை அடுத்த இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று பேராசிரியர் விபின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளக் கடிதத்தில் கோரியுள்ளார்.
மேலும், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள் போன்ற அதிகாரிகளை நியமிக்கும் போதும் இதுபோன்று உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, “நாம், இந்த மண்ணின் குழந்தைகள், கண்டிப்பாக
ஆளும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும், இல்லையெனில் ‘ஆட்சி’ என்பது கொடுங்கோன்மை தவிர வேறில்லை” என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.