சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சாதி பாகுபாடு நிலவுவதாக கூறி அங்கு பணிபுரிந்து வந்த பேராசிரியர் விபின் பி விட்டல் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜோதிர்மயா திரிபாதி அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பிக்கப் பார்க்கிறார் விசாரணை முடியும்வரை திரிப்பாதியை அதிகாரத்திலிரிந்து கீழிரக்கம் வேண்டும் என்று ஒன்றிய அரசின் உயர்கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த விபின், பணியில் சேர்ந்த ஆரம்பித்தில் இருந்தே சாதிய பாகுபாடுகளை அனுபவித்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார். சாதி பாகுபாடுகள் நடைபெற்றதற்கான பல்வேறு நிகழ்வுகளை அவர் குறிப்பிட்டு, அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்..
அதிகார தொடர்புகள், பாலினம் என்று எந்த பாரபட்சமுமின்றி அதிகாரத்தில் இருக்கும் தனிநபர்களால் பாகுபாடு காட்டப்படுகிறது” விபின் கூறியிருந்தார்.
இந்தக் காரணங்களுக்காக ஐஐடியை விட்டு வேறு கல்வி நிறுவனத்திற்கு செல்வதாகவும், இந்த விவகாரங்களை தீர்க்க உரிய நடவடிக்கை வேண்டுவதாகவும் தெரிவித்திருந்தார். .
மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய பாகுபாடு மற்றும் பி.எச்.டி படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து தொடர்ந்து செய்திகளில் சென்னை ஐஐடியின் பெயர் செய்திகளில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பேராசிரியர் விபின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,”சாதிப் பாகுபாடு நிகழ்வது தொடர்பாக சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. நான் விசாரணைக்குழுவில் குற்றஞ்சாட்டப்படட் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவர் ஜோதிர்மயா திரிப்பாதி குறித்து தெரிவித்திருந்தேன். துறைத்தலைவர் எனும் அதிகாரத்தில் இருக்கும் அவரை நியாயமான விசாரணைக்குள் உட்படுத்த முடியாது. அதிகாரத்தில் இருக்கும் அவருக்கு எதிராக துறைப் பேராசிரியர்கள் பேசுவது கடினம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பதவியிலிருந்து பேராசிரியர் திரிபாதியை கீழிரக்கம் செய்ய வேண்டிய தேவை குறித்து இருமுறை கடிதம் எழுதியதையும் நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரனைக்கு இடையூறு விளைப்பதாகவும் பேராசிரியர் விபின் பி விட்டல் கடிதத்தில் தெரிவித்துள்ளார். திரிபாதியை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ய நீங்கள் நிறுவனத்திற்கு அறிவுறுத்துவீர்கள் என்று நம்புவதாகவும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய ஆணையம் விசாரித்தால்தான் விசாரணை முழுமையடையும், குற்றவாளிகளை அதிகாரத்தில் வைத்திருப்பது நியாயமானது என்றும் பேராசிரியர் விபின் பி விட்டல் ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிராதானுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.