Aran Sei

கூகுள் நிறுவனத்தில் சாதிப்பாகுபாடு: சாதி பற்றி விரிவுரை வழங்கவிருந்த தலித் செயற்பாட்டாளரை இந்து விரோதி எனக்கூறி ஊழியர்கள் எதிர்ப்பு

டந்த ஏப்ரல் மாதத்தில், தலித் உரிமைகள் அமைப்பான சமத்துவ ஆய்வகத்தின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன், தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கூகுள் நியூஸ் ஊழியர்களுக்கு ஒரு விரிவுரை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த விரிவுரை கூகுள் ஊழியர்களின் எதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேன்மொழி சௌந்தரராஜன் அவர்களை இந்து விரோதி என்று கூறி நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் நிறுவன தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதன் விளைவாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த கூகுளின் மூத்த மேலாளரான தனுஜா குப்தா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தனது ராஜினாமா மின்னஞ்சலில் கூகுள் நிறுவனம் அதன் பன்முகத்தன்மையை நிலைநாட்ட முயற்சி செய்யக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘அமெரிக்காவிலும் தலித்துகளுக்கு எதிராக தொடரும் சாதியப் பாகுபாடு’ – கலிபோர்னியா பல்கலைக்கழக முன்னாள் மாணவி குற்றச்சாட்டு

கூகுளின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான சுந்தர் பிச்சையிடம் தேன்மொழி சவுந்தரராஜன் இது சம்பந்தமாக நேரடியாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், அவரிடமிருந்து அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மைக்ரோசாப்ட், ஏர்பின்ப், நெட்ஃபிக்ஸ், சேலபோர்ஸ் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களில் சாதி குறித்த விரிவுரைகளை வழங்கிய தேன்மொழி சவுந்தரராஜன், “அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு சமத்துவ ஆய்வகங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அழைப்புகளைப் பெறத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

“கூகிள் செய்ததை பெரும்பாலான நிறுவனங்கள் செய்யாது. இது அபத்தமானது. சாதிவெறியர்கள் மனித உரிமைகள் பற்றிய உரையாடல்களை விரும்புவதில்லை” என்று சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுபாட்டை களைய குழு – ஆசிய ஆசிரியர் குழு எதிர்ப்பு

தலித் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன், சமூக ஊடக நிறுவனங்கள் சாதிப் பாகுபாட்டை கணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்.

கூகுளின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் வளர்ந்த ஒரு பிராமணர், அவருக்கு சாதி பற்றித் தெரியாது என்பது நம்பும் படியாக இல்லை என்று தேன்மொழி சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “எங்கள் பணியிடத்தில் சாதி பாகுபாடுகளுக்கு இடமில்லை. எங்கள் பணியிடத்தில் பாகுபாடுகளுக்கு எதிராக மிகத் தெளிவான, வெளிப்படையாக பகிரப்பட்ட கொள்கைகளை நாங்கள் வைத்துள்ளோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : the quint

அடித்த கொள்ளையில் பங்கு வெளிவராத உண்மைகள் I Karikalan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்