Aran Sei

கோவிலுக்குள் நுழைய விடாததை காணொளியாக வெளியிட்ட பெண் – உ.பி. உள்துறை அமைச்சரின் தலையீட்டால் பெண் மீது வழக்குப் பதிவு

ந்துக்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ஒரு பெண் மற்றும் 5 பேர்மீது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜய்ன் மற்றும் இந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உஜ்ஜய்ன் மகாகாளீஸ்வரர் கோவிலுக்குள் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காணொளியைப் பதிவு செய்யப்பட்டதற்கு கோவில் பூசாரிகள் கோபடைந்தனர். சம்பந்தப்பட்ட பெண்மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் கண்காணிப்பாளருக்கு மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

‘மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியவர்களுடன் வியாபாரம் செய்யும் பாஜக அரசு‘ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

மற்றொரு நிகழ்வில், இந்து விரோத செயல்களில் ஈடுபட்டதாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளின் புகாரின் பெயரில், கர்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் நான்கு இந்து அல்லாத இளைஞர்கள்மீது இந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உஜ்ஜய்ன் மகாகாளிஸ்வரர் கோவிலில் ஆடை காரணமாக ஒரு பெண்ணிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடந்து, அதை அவர் காணொளியாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்தக் காணொளியை நீக்கிய அவர், இதற்காக மன்னிப்பு கோரி காணொளி ஒன்றை வெளியிட்டார்.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்

”மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், வழிபாடுத் தலங்களில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மகாகாளீஸ்வரர் கோவில் நடைபெற்ற சம்பவத்தை காணொளியாக பதிவிட்டதற்காக, சம்பந்தப்பட்ட பெண்மீது வழக்கு பதிய காவல் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளேன்” என மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தூரின் காந்தி நகர் பகுதியில் உள்ள ஆக்ஸ்போர் கல்லூரியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

லவ் ஜிகாத்தை கர்பா நிகழ்ச்சி ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்துக்கள் நிகழ்ச்சியில் பிற மதத்தினர் கலந்துக் கொள்வதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

இது தொடர்பாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மற்றும் நான்கு இளைஞர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்