Aran Sei

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

இதன் அடிப்படையில் மத்திய குற்றபிரிவு காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு, அதன் விசாரணை சென்னை எம்பி-எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டதால், புகாரை வாபஸ் பெறுவதாக புகார் அளித்தவர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்