Aran Sei

போக்சோ சட்டத்தில் கைதாக இருக்கிறார் சிவசங்கர் பாபா – வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் கேளம்பாக்கத்தை சேர்ந்த உறைவிடப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 சட்டங்களின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மேலும், வழக்கின் விசாரணை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டில், நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்த பாபா, பக்தர் காணிக்கையாக கொடுத்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி என்ற பெயரில், உறைவிட பள்ளியை நடத்தி வருகிறார்.

கொரோனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை தேவை – ஜி 7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்நிலையில், சென்னை கே.கே நகரில் செயல்பட்டு வந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் புகாரில் கைதானதை தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது  புகார்களை எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேளம்பாக்கம் பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர், அவரது அவரின் வழக்கறிஞர் நாகராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்தியாவை இந்துராஜ்யம் என்று அறிவிக்காததற்கு நேருவே காரணம் – பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்

சம்மன் அனுப்பபட்ட அனைவரும் ஜூன் 11 ஆம் தேதி ஆஜரான நிலையில், சிவசங்கர் டெராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது சார்பில் ஆஜரான ஜானகி தெரிவித்தார். ஜூன் 9 ஆம் தேதி பாபா சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதற்கான அனைத்து ஆதாரத்தையும் அவர் சமர்பித்தார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, வழக்கு சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் மாவோயிஸ்ட் எனக் கருதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் – வனத்திற்குள் சென்றவர் சுடப்பட்ட அவலம்

அவர் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருப்பதாலும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவர்கள் சான்றிதழ் அளித்திருப்பதாலும், அவரை கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : The Hindu 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்