இந்து கடவுள்களை அவமதித்ததாக தாண்டவ் வெப் சீரிசை உருவாக்கியவர்கள் மீது உத்தர பிரதேசத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவ்ரி 15,2021) தாண்டவ் எனும் 9 பாகங்களை கொண்ட வெப் சீரிஸ் ( இணைய வழி தொடர்) அமேசான் தளத்தில் வெளியானது. சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள சாதிய சிக்கல்களைப் பற்றி பேசிய படமான ஆர்டிக்கில் 15 (Article 15) திரைப்படத்தை எழுதிய கவுரவ் சொலங்கி தாண்டவ் இந்தத் தொடருக்கு கதாசிரியராக பணியாற்றியுள்ளார். அலி அப்பாஸ் ஜாபர் இந்தத் தொடரை தயாரித்து, இயக்கியுள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்
இந்தத் தொடரில் வரும் காட்சிகள் இந்து கடவுள்களை அவமதித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. சில அமைப்புகள் இந்தத் தொடரை ஒளிபரப்பிய அமேசான் அலுவலகத்தின் முன் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி
பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் கோடக், ‘தாண்டவ்’ வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
My letter to Hon.minister @PrakashJavdekar ji regarding regulation of the OTT platforms pic.twitter.com/twwI6OP4iM
— Manoj Kotak (@manoj_kotak) January 17, 2021
அந்த கடிதத்தில் ”டிஜிட்டல் தளங்களின் உள்ளடக்கத்தை நிர்வகிக்க எந்தச் சட்டமும் இல்லை. அத்தகைய தளங்களில் வெளிவரும் திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, போதைப்பொருள், துஷ்பிரயோகம், வெறுப்பு மற்றும் மோசமான செயல்கள் நிறைந்தவையாக இருக்கின்றன. சில நேரங்களில், அவை மத உணர்வுகளையும் புண்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தடையாக இருக்கும் ஜனநாயகம் – பாஜக செய்தி தொடர்பாளர்
பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ராம் கடம் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
பாஜக ஆளும் மத்திய பிரதசேத்தைச் சேர்ந்த அமைச்சரான ராமேஷ்வர் ஷர்மா தாண்டவ் தொடரை தடை செய்ய கோரியும் ஓடிடி தளங்களுக்கு தணிக்கை குழுவை உருவாக்க கோரியும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்
இந்நிலையில், அமேசான் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா மெஹ்ரா, எழுத்தாளர் கவுரவ் சொலங்கி மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி மனு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 ( வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்), 505 ( பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) , 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் வெளிவந்த காட்சிகளால் யாருடைய உணர்வுகளாவது புண்பட்டிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தாண்டவ் படக்குழுவினர் மன்னிப்பு கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.