Aran Sei

நீதிபதிகளை அவதூறு பேசிய குருமூர்த்திக்கு எதிராக வழக்கு – வழக்குக்கு அஞ்சிதான் மன்னிப்பு கோரினாரா?

டந்த ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் நீதிபதிகளின் நியமன்ங்கள் குறித்து அவதூறாகப் பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார்ளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக்கொண்டதாக காவலதுறையினர் ரசீது (CSR) வழங்கியுள்ளனர்.

துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

கோவாக்சின் எடுத்துக்கொண்டவருக்கு “தீவிர” பிரச்சனை – ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

அந்த நிகழ்ச்சியில், துக்ளக் இதழின் ஆசிரியர், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, வாசகர் ஒருவர், ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதில் அளித்த குருமூர்த்தி, தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அவருடைய வீட்டிற்கு விதிகளை மீறி தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது தொடர்பான முறைகேடு புகாரை, உதாரணமாக எடுத்துக்கொண்டு பேசினார்.

அந்த வழக்கில், தொலைபேசி இணைப்பைக் கொடுப்பதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதால், உயர் நீதிமன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் அவர்களை விடுவித்ததாக குருமூர்த்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “லஞ்சம், ஊழல் செய்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் கருணை காட்டுகிறது. ஆகவே, லஞ்சம், ஊழல் எப்படி குறையும். ஏனென்றால் நீதிபதிகள் அனைவரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யார் மூலமோ, யார் காலையோ பிடித்துதான் பலபேர் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்” என்று கூறினார்.

மேலும் “தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்படாது. ஆகவே, அரசாங்கம் மாறுவதால் மட்டுமே ஊழல்வாதி பிடிபடமாட்டான். போலீஸ், சிபிஐ, நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று அனைத்திலும் மாற்றம் வந்தால்தான், ஊழல்வாதிகள் சிறைக்கு போவார்கள்” என்றும் குருமூர்த்தி கூறினார்.

“சேரிகளின் குடியரசுத் தலைவர்” – உகாண்டா அரசியலை உலுக்கிய பாபி வைன்

1987ஆம் ஆண்டு, ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய குருமூர்த்தி “போஃபர்சில் கையும் களவுமாக பிடித்தோம். ஆனால், ஆட்சி மாறியதில், நீதிமன்றம் மாறியது. யாரை கையும் களவுமாக பிடித்தோமோ அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். ஆகவே, ஊழலை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்புவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை” என்று கூறினார்.

குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் செயல் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தடுப்பூசியை முதலில் அரசியல்வாதிகள் போட்டால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

திமுகவைச் சேர்ந்த பரந்தாமன் “ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள், பார்கவுன்சில் உறுப்பினர்கள் குருமூர்த்தி பேசியதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோரி இருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால் மற்றும் மூன்று வழக்கறிஞர்கள் இணைந்து, நீதிபதிகளை அவதூறாகப் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினரும் புகாரை ஏற்றுக் கொண்டதாக ரசீது (CSR) வழங்கியுள்ளனர். நீதிபதிகளை அவதூறாகப் பேசிய குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஆறு நாட்களில் நான்கு குற்றங்கள்

முன்னர், நீதிபதிகள் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கோருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு நடந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில் இன்று காலை மன்னிப்பு கோரி ட்விட்டரில் பதிவிட்டது, வழக்குப்  பதியப்படும் என்று அஞ்சியதால்தான் என்றும் கூறப்படுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்