தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவிக்குத் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், கிரிஜா வைத்தியநாதனும் 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருந்த நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்குத் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால், குஜராத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரையும் 2020 ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
உரிமைகளுக்காக போராடுவதும், போராட்டங்களை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம் – இயக்குனர் வெற்றிமாறன்
இதில் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டது தீர்ப்பாயத்தின் விதிகளுக்கு எதிரானது எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2020 ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயச் சட்டத்தின் பிரிவு 5-ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படக்கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுசூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்பட்டுள்ளது.
எழுவர் விடுதலை: கபட நாடகம் நடத்தும் ‘பாஜக-ஆளுனர்-அதிமுக’ கூட்டணி – வைகோ குற்றச்சாட்டு
ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுசூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளதால், கிரிஜா வைத்தியநாதனின் நியமனம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது, எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு மனுவுக்கு ஆறு வாரங்களில் மத்திய அரசும், கிரிஜா வைத்தியநாதனும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என தி ஹிந்து கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.