Aran Sei

அமலாக்கத்துறை மீது வழக்கு பதிவு செய்த கேரள காவல்துறை: சட்டம் தன் கடமையைச் செய்யும் – பினராயி விஜயன்

credits : the indian express

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில், அம்மாநில முதலமைச்சரை தொடர்புப்படுத்த முயன்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்குத் தங்கம் கடத்தப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை, சுங்கவரித்துறை போன்ற அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அட்டகுலங்காரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் (2020) ஸ்வப்னா சுரேஷை விசாரித்த அமலாக்கத்துறை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நபர்களுடன் நடந்த நிதி பரிவர்த்தனைகளில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சம்பந்தப்படுத்தி வாக்குமூலம் தருமாறு வற்புறுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்தது.

மேலும், ஸ்வபனா சுரேஷ் அரசு தரப்பு சாட்சியாக மாறி, முதலமைச்சருக்குத் தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக ஒப்புதல் அளித்தால் விடுதலை செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறை தெரிவிப்பது அந்த ஆடியோவில் பதிவாகியிருந்தது.

தங்கக் கடத்தல் வழக்கு – பினராயி விஜயனை தொடர்புபடுத்த மிரட்டப்படும் ஸ்வப்னா

ஸ்வப்னாவை வற்புறுத்துவது மட்டுமல்லாமல் அமலாக்கத் துறை தயாரித்த போலியான வாக்குமூலத்தில் கையெழுத்திடவும் ஸ்வப்னா சுரேஷ் நிர்பந்திக்கப்பட்டிருந்தார்.

‘பாஜகவுக்கு சுங்கத்துறையும் அமலாக்க துறையும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றன’ – பினராயி விஜயன் குற்றச்சாட்டு

இந்தச் சம்பவத்தைக் கண்டித்த, மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி, பினராயி விஜயனைக் குறிவைத்து ஒரு பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியது.

திரிணாமுல் எம்.பி வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி – சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில் வருகை

சமீபத்தில் சுங்கத் வரித்துறை தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் சபாநாயகருக்கும் தொடர்பிருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

பத்திரிக்கையாளர் நேஹா தீக்‌சித் வீடு தாக்கப்பட்ட விவகாரம் – சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

இந்நிலையில், கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு, கேரள தங்க கடத்தல் வழக்கில், உண்மைக்குப் புறம்பாக பினராயி விஜயனை தொடர்புப்படுத்த முயன்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு (சதி திட்டம் தீட்டியது, ஆதாரங்களை திரிக்க முயன்றது) பதிவு செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ஆதிக்க சாதிகளை அதிகளவில் களமிறக்கியுள்ள திமுக, அதிமுக : ஆய்வு முடிவுகள்

இன்னும் சில நாட்களில் இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கப்படுவார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய, கேரள முதல்வர், பினராயி விஜயன், ”சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை எடுக்க முயல்பவர்கள், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனும் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியதாக, தி இந்துவின் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்