Aran Sei

செல்போனில் வரும் கொரோனா அறிவிப்புகளை நீக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

credits : pti

ஒருவரை அலைபேசியில் (Mobile Phone) தொடர்பு கொள்ளும்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக வெளியாகும் அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

“கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது என்பது பொய்யான பிரச்சாரம், அது சில குறிப்பிட்ட நபர்களால் திட்டமிட்டு பரப்பபடுகிறது, இதை மக்கள் நம்பி விட்டனர்” என ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும்,”ஊரடங்குக்கு முன்னர் இருந்த நிலைபோல, போக்குவரத்து உட்பட அனைத்தையும் இயல்புநிலைக்கு கொண்டு வர வேண்டும்” எனவும் ”கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக இந்திய குடிமக்கள் மனதில் இருக்கும் அதி தீவிர அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” எனவும் மனுவில் கூறியுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னத்திற்கு மாறாக வேட்பாளர் பெயர், கல்வித் தகுதி – சட்ட ஆலோசகர்களின் கருத்தைக் கேட்கும் உச்ச நீதிமன்றம்

”கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அலைபேசியில் அழைக்கும்போது வரும் ஒலியை நீக்கி, உரிய நேரத்தில் மக்கள் தொடர்புகொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை நீதிமன்றங்கள் கவனமாக விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன் மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”இது போன்ற வழக்குகளை ஊக்குவிக்க முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளனர்.

SOURCE : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்