Aran Sei

டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி – ஆவணங்களை தந்தையிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் உயிரிழந்த நவ்ரீத் சிங்கின் மரணம் தொடர்பான ஆவணங்களை டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரபிரதேச காவல்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நவ்ரீத் சிங்கின் தந்தை ஹர்தீப் சிங் தீப்டீபா, டெல்லி உயர்நீதி மன்றத்தில் தன் மகன் காவல்துறையால் சுடப்பட்டதாலே இறந்தார் என்று தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போது, டெல்லி உயர்நீதி மன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் சீக்கியர்களை மிரட்டும் இந்து குழு – நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று நகரத் தந்தை எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநில காவல்துறைகள், நவ்ரீத் சிங் சுடப்பட்டதால் இறக்கவில்லை என்றும் தனது டிராக்டரை அதிகபட்ச வேகத்தில் வளைத்தபோது, தவறிவிழுந்தே இறந்தார் என்று கூறிவருகின்றன.

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப்பரிசோதனை ஆவணங்கள், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படாது தட்டிகழிக்கப்பட்டதாகவும், அதனால் நவ்ரீத் மரணம்குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது

இந்த மனுமீதான விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, நவ்ரீத் சிங்கின் பிரேதப் பரிசோதனை காணொளியையும், எக்ஸ் ரே-வையும் கேட்டபோது. ராம்பூர் மாவட்ட மருத்துவமனையும், உத்தர பிரதேச காவல்துறையும் தரமறுத்துவிட்டனர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்

நவ்ரீத்யின் தந்தையின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், மனுதாரரான நவ்ரீத்யின் தந்தையிடம் ஆவணங்களின் நகல் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்குப் பதிலளித்த ராகுல் மெஹரா ஆவணங்களை வழங்க எந்தத் தடையும் இல்லை என்று கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த ஆவணங்களை எய்ம்ஸ் (AIIMS) அல்லது, தடயவியல் துறை நிபுணர்கள் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விருந்தா குரோவர் கேட்டுக்கொண்டதாகவும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம், ஊடக சுதந்திரம் – பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வரும் திங்கள் அன்று விவாதம்

தலையில் காயம் ஏற்பட்டதால் நவ்ரீத் மரணம் அடைந்தார் என்று டெல்லி காவல்துறை தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தலையில் சுடப்பட்டதால் ஏற்பட்ட காயம் போன்று உள்ளதாக தடயவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் சந்தேகம் எழுப்பி இருக்கின்றனர் என்றும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சைதன்ய கோசைன் “டெல்லி காவல் துறை இந்த பேரணி நடந்த தீனதயாள் உபாத்தியாயா சாலை பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கோப்புகளையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் உண்மை வெளிப்படும்” என்றும் கூறியுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல் துறை வெளியிட்டிருந்த சிசிடிவி காணொளியில்.  டிராக்டர் பேரணியில் காவல்துறை ஏற்படுத்திய தடுப்புகளை, நவ்ரீத் டிராக்டரால் உடைக்கும் காட்சி மட்டுமே குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கோப்பு வெளியிடப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நவ்ரீத் தந்தையிடம் அவருடைய மகன் மரணம் தொடர்பான ஆவணங்களின் நகலை வழங்க, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்