Aran Sei

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி – நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையைத் திரும்பப் பெற்றது உச்சநீதிமன்ற கொலீஜியம்

ர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை,  நிரந்திர நீதிபதியாக நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற்று இருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

இது போன்ற வழக்குகளில் அனுபவம் அவசியம் என்ற அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்திலிருந்து வரும் தகவல் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”கணேடிவாலாவிற்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் இல்லை என்றாலும், அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் இது போன்ற வழக்குகளைச் சந்தித்திருக்க மாட்டார், எனவே அவருக்கு அனுபவமும் பயிற்சியும் தேவை” எனத் தகவல் தெரிவித்தாக என்டிடிவி கூறியுள்ளது.

போக்சோ சட்டத்திற்கு புதிய விளக்கமளித்த நீதிபதி: மீண்டும் சர்ச்சையில் மும்பை உயர்நீதி மன்றம்

நிரந்தர நீதிபதிகளை நியமிக்கவும், நியமிக்கப்பட்ட நீதிபதிகளை நிரந்தரமாக்கவும், மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்குவது உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் வழக்கம், சில சமயங்களில் அந்தப் பரிந்துரைகளைக் கேள்விகளுடன் மத்திய அரசு திரும்ப அனுப்பும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருக்கும் புஷ்பா கணேடிவாலாவை நிரந்திர நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமனறம் பரந்துரை செய்தது.

போக்சோ சட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு – தடை செய்த உச்ச நீதிமன்றம்

போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் அடிப்படையில், ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை,  பாலியல் தாக்குதல் என்று கூறுமுடியாது என்றும், மாறாக, பாலியல் உள்நோக்கத்துடன், தோலோடு தோல் உரசினால் மட்டுமே, அவ்வாறு கருத முடியும் என்று, ஜனவரி 19 ஆம் தேதி புஷ்பா தீர்ப்பளித்தார்.

போக்சோ சட்டம் குறித்து மும்பை நீதிமன்றம் வினோத விளக்கம் – தண்டனை பெற்றவர் விடுதலை

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணு கோபால், ஜனவரி 27 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்,  தாக்கல் செய்த மனுவில், நீதிபதி புஷ்பா கணேடிவாலா வழங்கிய தீர்ப்பு குழப்பமானது என்றும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருந்தாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மைனரின் கையைக் குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரைப் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும், போக்சோசட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது கூறி குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்து, நீதிபதி புஷ்பா, ஜனவரி 28 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

போக்சோ சட்டம் : மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் வழக்கு

நீதிபதி புஷ்பா வழங்கிய இந்த இரண்டு தீர்ப்புகளும் சர்ச்சையானதால், அடுத்து அவரை நிரந்திர நீதிபதியாக நியமிக்கக் கோரி செய்த பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற்றுள்ளது என்றும், அரசுக்கு வழங்கிய பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெறுவது அரிதான நிகழ்வாக அறியப்படுவதாகவும் என்டிடிவி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்