Aran Sei

முதலாளித்துவம் இனி நீடிக்கமுடியாது – பருவ நிலை தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு எச்சரிக்கை

ரவிருக்கும் பருவ நிலை தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (IPCC) வரைவு அறிக்கையின் கசிந்த மூன்றாம் பகுதி,  கிரக வரம்புகளை மீறுவதைத் தவிர்ப்பதற்கு தற்போதைய முதலாளித்துவ மாதிரியிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும் என்பதை நிறுவுகிறது. ஆகஸ்ட் 7 அன்று சுதந்திர ஸ்பானிய இடதுசாரி வெளியீடான CTXT ல் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி, “பசுமை வாயு (GHG) உமிழ்வு அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில் உச்சத்தை எட்ட வேண்டும்” என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறைவு என்பதையும் ஆவணம் ஒப்புக்கொள்கிறது.

collective Scientist Rebellion and Extinction Rebellion Spain அமைப்பைச் சேர்ந்த அறிவியலாளர்களால் கசியவிடப்பட்ட இந்தக் கட்டுரையில் கையொப்பமிட்டுள்ள அறிவியலாளர்களும், பத்திரிகையாளர்களும்  ஆறாவது அறிக்கையின் புதிய பகுதியை ஆய்வு செய்துள்ளனர்,  ஒரு பயனுள்ள மற்றும் நியாயமான மாற்றத்தை அடைய என்ன தேவை என்பதைப் பற்றிய அறிவியல் சமூகத்தின்  புரிதலுக்கும், எவ்வளவு குறைவாக சாதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைக்கும் இடையே உள்ள பரந்த முரண்பாடுகளை கசிவு தெளிவாகக் காட்டுகிறது. நல்வாய்ப்பாக,  வழக்கமான மிகவும் பயமுறுத்தும் நிலைகளில்,  நீண்ட காலத்திற்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாத கோரிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபத்தையும் மக்களுக்கு நட்டத்தையும் ஏற்படுத்துகிறது பெட்ரோல், டீசல் விலை உயர்வு – ராஜஸ்தான் முதலமைச்சர்

பகுப்பாய்விற்குள் செல்வதற்கு முன், ஒரு சிறிய பின்புலம் தேவை. 1990 ஆம் ஆண்டில், ஐபிசிசியின் முதல் மதிப்பீட்டு அறிக்கை “[வெப்பநிலையில்] கவனிக்கப்பட்டுள்ள  அதிகரிப்பு பெரும்பாலும் இயற்கையான மாறுபாட்டின் காரணமாக இருக்கலாம்” என்று கூறியது. இந்த விவாதம் அடுத்தடுத்த அறிக்கைகளில் முடிந்தது. இருப்பினும், இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஆறாவது அறிக்கையின்  பிரிவு ஒன்றின்  பகுப்பாய்வு – இப்போது அதிகாரப்பூர்வமானது – எந்த நிச்சயமற்ற தன்மையையும் நீக்கியுள்ளது. இது காலநிலை மறுப்பாளர்களிடமிருந்து மறுமொழிகளின் சாத்தியத்தை நீக்குகிறது,  அவர்கள் நீண்ட காலமாக அதிக இழப்பை ஏற்படுத்தியவர்களால் – புதைபடிவ எரிபொருள் செல்வாக்கு செலுத்து குழுக்களால் (லாபிகளால்) பெருமளவில் பணத்தைப் பொழிந்துள்ளனர். ஒரு மர்மத்தைத் தீர்ப்பதற்கான முதல் கேள்வி பொதுவாக ”கிளாசிக் குய் போனோ?” (யாருக்கு நன்மை?).

இப்போது உள்ள அடிப்படைக் கேள்வி என்னவென்றால், தேவையான மாற்றம் கடினமானதாக இன்றி நன்மையாகக் கருதப்படுவதை நாம் எவ்வாறு உறுதி செய்வது?  காலவரையற்ற வளர்ச்சியைக் கைவிடுவதைத் தவிர நமக்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை கசிந்துள்ள அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த மாற்றம் நாடுகளுக்கிடையேயான உமிழ்வுகளில் உள்ள கலாச்சார மற்றும் வரலாற்று வேறுபாடுகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உலகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், அதனால் ஒருவரைவிட ஒருவருக்கு நன்மை  கிடைப்பதாக இருக்கக்கூடாது, மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக  அதிகரித்துவரும் ஏழைகளுக்கும், அதிகரித்துவரும் மோசமான பணக்காரர்களுக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகும் சமுதாயக் கூடங்கள் – காஷ்மீர் தலைவர்கள் கண்டனம்

இந்த மூன்று இணைவேறுபாடுகளும் கவனிக்கப்பட வேண்டும்,  அல்லது மாற்றத்திற்கு ஆதரவாளர்களை விட அதிகமான எதிரிகளை ஏற்படுத்திக் கொண்டு தன்னைத் தானே நாசப்படுத்திக் கொள்ளும். “பரிசோதனை பொருளாதாரத்தின்,  நியாயமற்றதாகக் கருதப்படும் நடவடிக்கைகளின் அளவீடுகளை,  அவற்றை ஏற்காததற்காக கொடுக்கும் விலை அதிகமாக இருந்தாலும் கூட,  மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன” என்று அந்த வரைவு கூறுகிறது.

நாம் போக்கை மாற்ற முடிந்தாலும் கூட, “மாற்றங்கள் பொதுவாக மென்மையாகவும் படிப்படியாகவும் இல்லை. அவை திடீரென  ஏற்படுபவையாகவும், பேரழிவை விளைவிப்பதாகவும் இருக்கும்,” என எச்சரிக்கும் அறிவியலாளர்கள்,  “தற்போதுள்ள மூலதனம், நிறுவனங்கள் மற்றும் சமூக நெறிமுறைகளின் மூலம் ஏற்படும் தடைகளால் மாற்றத்தின் வேகம் தடைபடலாம்” என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இது செயலற்ற நிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

“கடந்த இருநூறு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் புதைபடிவ ஆற்றலின் மையத்தன்மை கரிம  நீக்கத்தின் சாத்தியம் பற்றிய தெளிவான கேள்விகளை எழுப்புகிறது” என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகள் நமது பொதுவான செல்வங்களான, நமது காற்று, காடுகள், நிலங்கள் போன்றவற்றைப் பிரித்தெடுத்து மிகச் சிறிய சிறுபான்மையினரின் கைகளில் கொடுத்துள்ளன. எனவே சமத்துவமின்மை அதிகரித்து வரும் நேரத்தில் பசுமைக் கொள்கைகள் மறுபகிர்வு செய்யக் கடமைப்பட்டுள்ளன.

கார்பன் விலைகளின் பின்னடைவைக் குறைக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று,  குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஆதரவாக வரி வருவாயை மறுபங்கீடு செய்வதாகும். ஆனால், மானுடவியலாளர் ஜேசன் ஹிக்கல் நமக்கு நினைவூட்டுவது போல், இதில் “புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பதில் ஒரு கட்டுப்பாடான அளவை நிர்ணயிப்பதைக் காட்டிலும் குறைவான எதுவும், ஆண்டு இலக்குகளை குறைத்து தொழில்துறையை சுழியமாகக்  குறைத்துவிடும் வகையில் கையசைத்து வழி அனுப்பி வைப்பதாகவே இருக்கும்.”     இது அறிக்கையின் வரையறுக்கும் பத்திகளில் ஒன்றிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

ஜெய்பீம் படத்தில் கன்னத்தில் அறையும் காட்சி: என் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன் – பிரகாஷ் ராஜ் விளக்கம்

“தொழில்துறை வளர்ச்சியினால் மேலும் குறிப்பாக, முதலாளித்துவ சமூகத்தின் இயல்பால் உருவாகும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தன்மையால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது என்றும்,  அதனால் அவை இறுதியில் நீடிக்க முடியாதவை,” என்று அவர்கள் கருதுகின்றனர். பலர் முன்பே கூறியிருந்தாலும், உலகின் முன்னணி காலநிலை அறிக்கையில் எதையும் இவ்வளவு தெளிவாகப் படித்ததாக நாங்கள் நினைக்கவில்லை, இது மேலும் கூறுகிறது, “தற்போதைய உமிழ்வுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு பொருந்தாது என்பதுடன் உடனடியான, ஆழமான வெட்டுக்கள் முற்றிலும் கட்டாயமாகும்.வெவ்வேறு உமிழ்வு குறைப்பு காட்சிகள்இந்த இலக்குகள், உமிழ்வுகளில் கடுமையான குறைவைக் குறிக்கின்றன, அதனால், குறுகிய காலத்தில் ஆற்றல் உற்பத்தி மற்றும் பொருள் பயன்பாட்டு குறைப்பு  தற்போதைய மாதிரியால் அடைய இயலாது. கூடுதலாக, 2015 இல் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டபடி,  2030 க்குள் அடையப்பட வேண்டிய 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்கான உமிழ்வைக் குறைப்பதை பிரிவு   இணைக்கிறது. அந்த 17 இலக்குகளுக்குள் தற்போது முரண்பாடுகள் இருக்கும் போதிலும், அவை சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு, அதனுடன் கூடவே சர்ச்சைக்குரிய ஒன்றாக, அறிக்கைக்குள்ளேயே, நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற மறுக்க முடியாத நோக்கங்களை உள்ளடக்கியது.

ஐபிசிசியில் அறிவியல் விவாதத்தை மறைக்காமல் இருப்பது வழக்கம். 1990 ஆம் ஆண்டில், அது இன்னும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களைச் சுற்றியே இருந்தது, ஆனால் 30 பலனற்ற ஆண்டுகளுக்குப் பிறகும்,  நாம் தொடர்ந்து வளரவும், தேவையான விகிதத்தில் உமிழ்வைக் குறைக்கவும் முடியும் என்று இன்னும் நம்பும் நிலைகளுக்கும், இத்தனையும் மற்றொரு வகை  மறுப்பு வாதமாக  காண்போருக்கும்  இடையே விவாதம் இருப்பதைக் காண்கிறோம். ஆனால்  இறுதியில் நன்மை பெறுபவர்களுக்கு அதன் மிகவும் நுட்பமான வடிவமாக உள்ளது.  ஒரு காலத்தில் யார் புவி வெப்பமடைதலை கேள்விக்குள்ளாக்கினார்களோ அவர்களே இப்போது அதனை பாதுக்காக்கிறார்கள்.

ஐபிசிசி அறிக்கை “குறைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அதிகரிக்கும் மாற்றங்கள் மூலம் அடைய முடியாது” என்று ஏற்றுக்கொள்கிறது. வளர்ச்சியில் பிடிவாதமாக கவனம் செலுத்துவதற்கு வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு செறிவுகளைக் குறைக்கக்கூடிய தொழில்நுட்பங்களின் பாரிய வளர்ச்சி தேவைப்படுகிறது, ஆனால் இந்த கார்பன் பிடிப்பு மற்றும் வரிசைப்படுத்துதல்(ccs) தொழில்நுட்பங்கள் கணித்தபடி செயல்படவில்லை.    சுற்றுச்சூழல் கார்பன் மூழ்கிகள் தெளிவான வீழ்ச்சியில் உள்ளன மற்றும் காலநிலை பின்னூட்டங்கள் தூண்டப்படுகின்றன,  இது இப்போது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டதைப் போல, பூமியை திரும்பப் பெறாத பல புள்ளிகளைக் கடந்து வெப்பமான மற்றும் நிலையற்ற நிலைக்குத் தள்ளுகிறது. காலநிலை சரிவைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி நிரந்தர வளர்ச்சி மாதிரியிலிருந்து விலகிச் செல்வதுதான்.

உடன்படிக்கைகள் மற்றும் உரிமைகோரல்களுக்குப் பொருந்தாத  செயல்பாடுகளால் சர்வதேச ஒத்துழைப்பில் அடையாளம் காணப்பட்ட “ஒழுங்கமைக்கப்பட்ட பாசாங்குத்தனம்”, புவி வெப்பமயமாதலை தணிப்பதில் உள்ள மிக முக்கியமான தடைகளில் ஒன்றாகும் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.  கோவிட்19 இன் நடைமுறைப்படுத்தப்படாத பாடங்களை மறந்துவிடாதீர்கள் என்றும் ஐபிசிசி அழைப்பு விடுத்துள்ளது. ஒப்புமைகள் தெளிவாகவும் நேரடியாகவும் இருப்பதால், காலநிலை மாற்றத்தில் அதே தவறுகளைச் செய்வதைத் தவிர்க்க அந்த பாடங்கள் உதவ வேண்டும். ஏற்படும் பாதிப்புகளின் செலவுகளுடன் ஒப்பிடும்போது தடுப்பு மற்றும் ஆயத்த நடவடிக்கைகளுக்கான செலவுகள் மிகக் குறைவு.  தாமதமான நடவடிக்கையால் செலவுகள் அதிகரிக்கும், அதை தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சவால்கள் எதிர்பாராத விளைவுகளுடன் அதிவேகமாக அதிகரிக்கும். நிலையான வளர்ச்சியின் கருத்தாக்கத்தில் உள்ள பெரும் அளவிலான வெளிப்படையான முரண்பாடுகளைக் கருத்தில் கொண்டு,  செழிப்பை ஜிடிபியை  அளவுகோலாகக் கொண்டு அளவிடுவதிலிருந்து விலகி, குறைந்த போட்டியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை நோக்கி செல்வது மட்டுமே எந்த வடிவிலான வளர்ச்சி பற்றிப் பேசுவதையும்   சாத்தியமாக்கும். நீடித்த வளர்ச்சி செங்குத்தானதல்ல. கிடைமட்டமானது. இதன் பொருள் சமத்துவமின்மையை குறைப்பது என்பதாகும்.

இஸ்லாமியர்களின் தொழுகை இடத்தில் கோவர்தன் பூஜை நடத்திய இந்துத்துவவாதிகள் – கலந்து கொண்ட பாஜக தலைவர்

நம்மில் பெரும்பாலோர் ‘நன்மை பெறுகிறார்கள்’   இல்லாவிட்டால் தீர்வு கிடைக்காது என்ற கருத்து இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இதனால்தான் நடவடிக்கைகளைப் புரிந்துக்  கொள்ளவும்,  மேலும் சில தியாகங்கள் நன்மைகளாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பிரச்சனையின் தீவிரத்தையும், அளவையும்  விளக்க வேண்டியதாயிற்று. காலநிலை நிலைத்தன்மையை நிரந்தரமாக மாற்றுவதும்,  வளங்கள் மீதான மோதல்களை  கடுமையாக்குவதும்தான் இதற்கு மாற்று..

போட்டி,  இனங்கள் வளர்ச்சியடைய உதவியது,  ஆனால், புத்திசாலித்தனமான நுண்ணுயிரியலாளர் லின் மார்குலிஸ் காட்டியுள்ளபடி, பரிணாம வளர்ச்சிக்கான திறவுகோல் ஒத்துழைப்புதான். நாம் இப்போது சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் நெருக்கடிகளின் குறுக்குவெட்டு மூலம் வரையப்பட்ட ஒரு சரிவை எதிர்கொள்கிறோம். குறைந்த ஆற்றலுடன் நாம் நல்ல வாழ்க்கையைப் பெறலாம் (அதே நேரத்தில், நமக்கு குறைந்த வேலைச் சுமையும் இருக்கும்), ஆனால் முதலாளித்துவம் ஒரு வகையான தொழில்நுட்ப பிற்போக்குத்தனத்தால் அதன் பிறழ்வை முடிக்காமல் குறைந்த ஆற்றலுடன் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. நாம் ஒத்துழைத்தால் மட்டுமே, எல்லைகள் என்றால் என்ன என்று தெரியாத சூழல் உட்பட,  நாம் இவ்வளவு பகிர்ந்து கொள்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே, வீழ்ச்சியைத் தவிர்க்க நாம் எதிர்வினையாற்ற முடியும்.

 

www.thewire.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

எழுதியவர்:ஜுவான் போர்டெரா

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்