Aran Sei

செல்போன் வேவு பார்க்கப்பட்டது கண்டறியப்பட்டாலும், அதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது – மத்திய தகவல் ஆணையத்திடம் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ரு செல்போன் வேவு பார்க்கப்பட்டது கண்டறியப்பட்டாலும், அதை வெளியில் தெரிவிக்க முடியாது என மத்திய தகவல் ஆணையத்திடம் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டது தகவல் வெளிப்படுத்துவது என்பது, இந்திய டெலிகிராப் சட்டத்தின் பிரிவு 5 (2) ஐ மீறுவதாக உள்ளது என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில், நீலேஷ் கஜானன் மராத்தே என்பவர்,  அவரது இரண்டு செல்போன்களும் கண்காணிக்கப்பட்டதாக என்று தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் உள்துறை அமைச்சகத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய தகவல் ஆணையத்தின் விசாரணை ஆணையத்தின்போது, வேவு பார்க்கப்படுவது சட்டத்த்திற்கு புறம்பானது என வாதிட்டிருந்தார்.

இதில் பதில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகம், ”ஒரு செல்போன் வேவு பார்க்கப்பட்டதா இல்லையா என்பதை வெளியிடுவது, இந்திய டெலிகிராப் சட்டம் பிரிவு 5 (2) க்கு எதிரானது” என தெரிவித்துள்ளது.

இந்திய டெலிகிராப் சட்டம் 1951, விதி 419 (A)ன் துணை விதி 18ன் கீழ் ஒட்டு கேட்பு தொடர்பான அனைத்து பதிவுகளும் கடிதங்களும் அழிக்கப்பட்டுவிட்டன என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் பெகசிஸ் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுக்கள்மீதான விசாரணையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு, வேவு பார்க்கப்பட்டது தொடர்பான அனைத்து கோணங்களையும் ஆராய விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தது.

Source : The Wire

தொடர்புடைய செய்திகள் :

பெகசிஸ்க்காக மேற்கு வங்க அரசின் ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்திய ஒன்றிய அரசு – தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பெகசிஸ் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு – ப.சிதம்பரம்

பெகசிஸ் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் முன்னாள் ஊழியர் உச்சநீதிமன்றத்தில் மனு

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு: எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர், இதற்கு மட்டும் பேச மறுப்பது ஏன் – ப.சிதம்பரம் கேள்வி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்