Aran Sei

தடுப்பூசிகள் இல்லாமல் முதியவர்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது – மத்திய அரசின் பதிலுக்கு நீதிமன்றம் கருத்து

கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படமால் முதியவர்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதியவர்களால் தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாது என்பதால், அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் துருதி கபாடியா மற்றும் குணால் திவாரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ”முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் விதமாக வீடுகளே சென்று தடுப்பூசி செலுத்திட உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் 10 நாட்களில் 6 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு –  ஆக்சிஜன் கிடைத்தும் வெண்டிலேட்டர்கள் கிடைக்காததால் நேர்ந்த அவலம்

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதில் இருக்கும் சிக்கல் தொடர்பாக மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “தடுப்பூசிகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. குளிர்சாதன வசதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என்பது குறித்து 30 நிமிடங்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், தடுப்பூசிகள் எடுத்துச் செல்லும்போது போக்குவரத்தால் தடுப்பூசி மாசு ஏற்பட வாய்ப்பிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு, ”இதற்கு ஒரு தீர்வு வேண்டும். முதியவர்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. இது பிசாசிற்கும் ஆழ்கடலுக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுப்பதை போன்றது. ஆம்புலன்சில் தீவிர சிகிச்சை பிரிவு வந்திருக்கும்போது, குளிர்சாதன வசதியை வைத்துக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு கோரிய நீதிபதிகள், “இஸ்ரேல் மக்கள் தொகையில் பொரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல் நகரில், மக்கள் காரில் அமர்ந்திருக்கும் போதே தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். அவர்கள் தடுப்பூசி மையங்களுக்குக் கூடச் செல்வதில்லை. நாமும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Source : TheWire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்