Aran Sei

“நேரில் வர இயலாது., வீடியோ கான்பரன்ஸில் விசாரணை நடத்துங்கள்” – தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஆஜராக மறுக்கும் ரஜினி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டின் போது, அங்கு நேரடியாக சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று பேட்டி அளித்திருந்தார்.

தூத்துக்குடியில் முதலமைச்சர்: ‘துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு’ நீதி வேண்டும் – கனி மொழி

ரஜினியின் இந்தப் பேட்டி தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஆஜராகவில்லை. அப்போது அவர் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறார். அதன்படி, ஏற்கனவே 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 586 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான்’ – தமிழக அரசு அதிரடி

இதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு ஒரு நபர் ஆணையம் 2-வது சம்மன் அனுப்பியது. அதில் ஜனவரி 19-ம் தேதி, ரஜினிகாந்த் தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விசாரணைக்கும் ரஜினி நேரில் ஆஜராகவில்லை. இம்முறையும் அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதியே ஆஜராகி நேரில் விளக்கம் அளித்தார்.

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி இல்லை’ – உச்ச நீதிமன்றம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்திடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம். தூத்துக்குடி விசாரணை ஆணையத்தின் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த வசதியில்லாததால் சென்னையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு மாத கால அவகாசத்திற்க்கு பிறகு விசாரணை நடக்கலாம்” என ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் இளம்பாரதி கூறியிருக்கிறார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்