Aran Sei

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்யுங்கள் – மத்திய அமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடிதம்

வேகமாகப் பரவி வரும் கொரோனா 2-வது அலையிலிருந்து தேர்வு மையங்களில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது கடினம். எனவே 10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா காலத்தில் மாணவர்களைத் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தும் சிபிஎஸ்சி வாரியத்திற்கு அவர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு பிரியங்கா எழுதியுள்ள கடிதத்தில், ”மாணவர்களைக் கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைப்பதன் மூலம், தேர்வு மையங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டா மாறினால் மத்திய அரசும், தேர்வு வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் தீவிர பாதிப்புக்கு ஆளாகினால், சட்டப்படி மத்திய அரசும் சிபிஎஸ்இ வாரியமும் பொறுப்பேற்க தயாரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – நடிகர் சோனு சூட்

கொரோனா இரண்டாவது அலையால் நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைப்பதை நினைத்து லட்சக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர் என பிரியங்கா காந்தி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கும் வேளையில், மாணவர்கள் தேர்வு எழுதும்போது தாங்கள் தொற்றால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தால், பதற்றத்தால் முழுத்திறமையையும் வெளிப்படுத்தித் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படலாம். ஆதலால் தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: இந்திய மக்களைவிட உங்களுக்கு யார் முக்கியம்? – பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ

“பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோருடன் மத்திய அரசு பேசிக் கல்விக் கடமைகளை நிறைவேற்றும் வழிகள் குறித்து ஆலோசிக்கும் என நம்புகிறேன். மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுதச் செய்வது ஆபத்தான சூழலுக்குத் தள்ளும். இளம் வயதினரை பாதுகாப்பதும், வழிநடத்துவதம் அரசியல்வாதிகள் பொறுப்பாகும்” என பிரியங்கா காந்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்தி வேண்டும் என ஒரு லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் மத்திய அரசுக்கு மனுக்கள் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்