வலது சாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் கௌரி லங்கேஷிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது நினைவு நாளை(செப்டம்பர் – 5), ‘கௌரி லங்கேஷ்’ தினமாக அனுசரிக்க கனடா நாட்டின் பர்னாபி மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக, அவரது சகோதரி கவிதா லங்கேஷ் தெரிவித்துள்ளார்.
பர்னாபி மாநகராட்சி மேயரிடம் இருந்து அறிவிப்பு கிடைக்கப் பெற்றதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேயர் மைக் ஹர்லி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தைரியமிக்க இந்திய ஊடகவியலாளரான கௌரி லங்கேஷ் நீதி மற்றும் நியாத்திற்காக நின்றவர், மூடநம்பிக்கைகள் மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்த்தவர், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்” என தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிதற்கான 2017 ஆம் ஆண்டு உயிரிழந்த கௌரி லங்கேஷை, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்தில், இந்திய பாரம்பரியத்தின் கனடியர்கள் நினைவு கூர்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பர்னாபியின் மேயரான மைக் ஹர்லி என்னும் நான், செப்டம்பர் 5 ஆம் தேதியைக் கௌரி லங்கேஷ் தினமாக பிரகடனப்படுத்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.
“நிச்சயமாக, நான் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். உலகம் மோசமாக இல்லை என்று நான் உணர்கிறேன். உண்மை, அதிகாரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கான நம்பிக்கை உள்ளது. குறைந்தபட்சம் பத்திரிகையாளர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள், எல்லா நேரத்திலும் தாக்கப்படுவதில்லை.” என கௌரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் தெரிவித்துள்ளார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.