இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டமானது உலக வரலாற்றில் நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்று என்றும் அந்தப் போராட்டத்தில் நடந்த வன்முறையைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜக்மீட் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இன்று (ஜனவரி 30) இந்திய வம்சாவளியை சேர்ந்த தேசிய ஜனநாயகக் கட்சியின் கனட நாடாளுமன்ற உறுப்பினரான ஜக்மீட் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி செய்தி ஒன்றை இணைத்து, பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
I am deeply concerned about the violence against farmers in India
Those calling to harm farmers must be held accountable and the right to peaceful protest must be protected
I am calling on Justin Trudeau to condemn the violence, immediately
Join me: https://t.co/lNairgWw2L pic.twitter.com/r6QvXcWwsU
— Jagmeet Singh (@theJagmeetSingh) January 29, 2021
அந்தப் பதிவில், “இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்குறித்து நான் மிகுந்த கவலையோடு கவணித்து வருகிறேன். விவசாயிகளுக்கு எதிராகத் தீங்கு விளைவிப்பவர்கள், இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அமைதியாகப் போராடுவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்குக் கனடா ஆதரவு – தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
மேலும், “இந்த வன்முறையை உடனடியாகக் கண்டிக்க ஜஸ்டின் ட்ரூடோவை நான் அழைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
ட்வீட்டில் இணைக்கப்பட்ட காணொளியில், பேசியுள்ள ஜக்மீட் சிங், “இந்தியா முழுவதும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டமானது, உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று. விவசாயத்தை தனியார் மயமாக்கும் சட்டங்களால், தங்கள் வாழ்வாதரத்திற்கான வருவாயைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்து, அதற்கு எதிராகப் போராடுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
`போராடுவது ஜனநாயக உரிமை, இது நிலைநாட்டப்பட வேண்டும்’ – கனடிய பாதுகாப்புத் துறை
மேலும், “தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அமைதியான வழியில் விவசாயிகள் போராடி வரும் அதே வேளையில் உள்ளூர் சமூகத்திற்கும் தங்களால் முடிந்தவற்றை செய்கிறார்கள்” என்று கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜக்மீட் சிங் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.