Aran Sei

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமரே விளம்பரப்படுத்தலாமா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

ண்மையில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உண்மைகளை தவறாக சித்தரித்துள்ளது மற்றும் ஒரு தலை பட்சமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். மேலும் அவர், இளைஞர்களை தவறாக வழிநடத்தும் ஒரு படத்திற்கு நமது நாட்டின் பிரதமரே விளம்பரப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் vs பர்சானியா – பாஜகவுக்கு எதிராக குஜராத் படுகொலை குறித்த படத்தை பரிந்துரைக்கும் இணையவாசிகள்

“சமூகத்தின் சூழலை குலைக்கும் வகையில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார் . மதத்தின் அடிப்படையில் மீண்டும் நாட்டை பிளவு படுத்துவதற்கான முயற்சிகள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

1980-களின் பிற்பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் பாதிக்கப்படும் காஷ்மீர் பண்டிட்கள் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்.

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட்களை விட இஸ்லாமியர்களே அதிகம் – கேரளா காங்கிரஸ் ட்வீட்

உத்தரபிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : zeenews

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்