Aran Sei

தகுதியான சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

த்திஸ்கர் மாநில சட்ட சேவை ஆணையம் (சிஜிஎஸ்எல்எஸ்ஏ) மற்றும் மாநில சிறைத்துறை இணைந்து, முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கான தகுதிகளை உடைய சிறை கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

‘உன்முக்த்’ என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தொடங்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது சத்தீஸ்கர், பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த விவகாரம் தொடர்பான முன்னோடித் திட்டங்களைத் வகுத்து நடைமுறைப்படுத்த தொடங்கப்பட்டது என்று சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பரப்புரையை செயல்படுத்த சிறை நிர்வாகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் (டிஎல்எஸ்ஏ) தலைவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சிஜிஎஸ்எல்எஸ்ஏ-வின் செயலாளர் சித்தார்த் அகர்வால் கூறியுள்ளார்.

‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கைதிகளுக்கு பிணை வழங்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

மேலும், “குற்றவியல் நடைமுறை சட்டத்தின்  பிரிவு 432 (2)ன் கீழ் நிலுவையில் உள்ள விடுப்பு விண்ணப்பங்களுக்கு சரியான நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகள் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. தகுதியான சிறைக்கைதிகளை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது தொடங்கி, விடுப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சத்திஸ்கர் மாநில சட்ட சேவை ஆணையத்தின் (சிஜிஎஸ்எல்எஸ்ஏ) சட்ட உதவிகள் கிடைக்கப் பெற செய்தல் வரை இந்தத் திட்டம் செயல்படும்.” என்று சிஜிஎஸ்எல்எஸ்ஏ-வின் செயலாளர் சித்தார்த் அகர்வால்  விளக்கியுள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்