Aran Sei

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தியவரை திருமணம் செய்து கொள்வீர்களா? எனக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்டதற்காக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மன்னிப்பு கோருவதோடு, பதவி விலக வேண்டும் என 3,500க்கும் மேற்பட்ட குடிமக்கள், பெண்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள், பெண்ணிய செயல்பாட்டாளர்கள் இணைந்து எழுதிய  கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளிக்குச் செல்லும் சிறுமியை கடத்தி கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, அவரைப் பெட்ரோல் ஊத்தி கொளுத்திவிடுவதாகவும் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, திங்கள் கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி இந்தக் கேள்வியை எழுப்பியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” இந்திரா காந்தியின் அவசர நிலை தவறான முடிவு ” – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து

”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற உயரிய இடத்தில் இருந்து கொண்டு, இது போன்ற செயல்களை செய்வது, மற்ற நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர் மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களுக்கும் நிறுவனங்களுக்கும், இந்தியாவில் பெண்களுக்கு அரசியலமைப்பு உரிமை இல்லை என்ற கருத்தை தெரிவிக்கும்.

“இது பெண்கள் மற்றும் சிறுமிகளை மௌனமாக்கவே வழிவகுக்கும்; பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, அந்தச் செயலில் ஈடுபடுவதற்காக உரிமையை வழங்குவதோடு, அந்தச் செயலை  நியப்படுத்தவோ அல்லது சட்டபூர்வமாக்கவோ அனுமதிக்கும்” என அன்னி ராஜா, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, மைமூனா மொல்லா, ஜாகியா சோமன் உள்ளிட்ட  பெண்கள் உரிமை ஆர்வலர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

“கணவர் மிருகத்தனமான மனிதராக இருந்தாலும், சட்டபூர்வமாக திருமணமான ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு இடையிலான உடலுறுவை  பாலியல் வன்கொடுமை என அழைக்கலாமா?” என்ற மற்றொரு வழக்கில் தலைமை நீதிபதிக்கு கேட்டதற்கும் எதிர்ப்பு வலுப்பதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரும் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினருமான பிருந்தா காரத் தனிப்பட்ட முறையில் எழுதி இருக்கும் கடிதத்தில், “எண்ணங்களும், உணர்ச்சிகளும் மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு  பெண்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்