Aran Sei

மேற்கு வங்கம்: பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை – கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

Credit: The Wire

ரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமான பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மேற்கு வங்க அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று (மார்ச் 25), உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஆர்.பரத்வாஜ் அடங்கிய அமர்வு, வழக்கி விசாரணையை ஏப்ரல் 7 தேதிக்கு ஒத்துவைத்துள்ளது. அதற்கு வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

நீதியின் நலனை கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தின் போக்டுய் கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து அதிகாரியின் கொலையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில்  நடைபெற்ற கலவரத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்து கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக கல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமையின் (என்) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

திரிணாமூல் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் 8 வீடுகளுக்கு தீ வைப்பு -2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

முன்னதாக, கலவரம் நடைபெற்ற இடத்திற்கு நேற்று (மார்ச் 24) சென்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், கலவரத்திற்கு காரணமாக இருந்தவர்களை கட்சி பாகுபாடு இன்றி கைது செய்ய காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்