Aran Sei

வெளிநாட்டில் இருக்கும் இந்திய சொத்துக்கள் பறிமுதல் – கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு பிரஞ்சு நீதிமன்றம் அனுமதி

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் இந்திய அரசு சொத்துக்களை பறிமுதல் செய்யக் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு பிரஞ்சு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்திய அரசின் சுமார் 20 சொத்துக்களை பறிமுதல் கொள்ள பிரஞ்சு நீதிமன்றம், கடந்த ஜூன் 11 ஆம் தேதி அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை நேற்று (ஜூலை 8) கெய்ர்ன் நிறுவனம் தொடங்கியுள்ளது.

அநீதியை எதிர்ப்பதுதான் அறம் – (கண்ணகி – முருகேசன்) வழக்கறிஞர் ரத்தினத்தோடு ஓர் உரையாடல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கெய்ர்ன் நிறுவனத்திற்கு 120 கோடி அமெரிக்க டாலர் அதற்கான வட்டி மற்றும் அபராதத்தை சேர்த்து வழங்குமாறு இந்திய அரசுக்கு நடுவர் குழு உத்தரவிட்டது.

‘திரைப்படமாக்கல் திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் குரல்கொடுக்க வேண்டும்’ – தமுஎகச தீர்மானம்

இந்த உத்தரவை இந்திய அரசு ஏற்காதல் நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்களை கெய்ர்ன் நிறுவனம் அணுகி வருகிறது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்