Aran Sei

’தடுப்பூசிகள் காணாமல் போனது குறித்து முறையான விசாரணை வேண்டும்’ – ப. சிதம்பரம் வலியுறுத்தல்

டுப்பூசிகள் காணாமல் போனது தொடர்பாக முறையான விசாரணை வேண்டும் என இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டுள்ள அவர், “தடுப்பூசிகள் காணாமல் போன மர்மம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தடுப்பூசிகள் தயாரிக்க தேவையான நேரம் தொடர்பான பாரத் பயோடெக்கின் அறிக்கை குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

”உற்பத்தி திறன், உற்பத்தி செய்த அளவு இரண்டு வேறு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இரண்டு உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த உண்மையான அளவுபற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரிலையன்ஸ் குழுமம், எச்.சி.எல் மற்றும் பிற கார்பரேட் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்த முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால், இவர்கள் தடுப்பூசிகளை யாரிமிருந்து பெறுவார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

”உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் என யாரிமிருந்து தடுப்பூசிகளை மாநில அரசுகள் பெற முடியவில்லை. இந்நிலையில், தடுப்பூசிகளை யாரிடமிருந்து பெற முடியும என கார்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன” என கேள்வி எழுப்பியுள்ளார்.

”இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரண்டு உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறன், உற்பத்தி செய்த அளவு, விநியோகம், வாடிக்கையாளர்கள் பட்டியல் ஆகியவை தொடர்பாக,  தலைமை கணக்கு தணிக்கையாளர் தலைமையிலான முழு அளவு தணிக்கை அவசியம்” என ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

“தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக மக்கள் தெருக்களில் இறங்கு போராடுவதற்கு முன் தடுப்பூசிகள் காணாமல் போனது தொடர்பான மர்மத்தைக் கண்டறிவது அவசியம்” என இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர்  ப. சிதம்பரம் பதிவுட்டுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்