Aran Sei

அகழாய்வுகளுக்கு அனுமதி வழங்கும் ஆலோசனைக் குழுவில் தமிழர்கள் புறக்கணிப்பு – சு.வெங்கடேசன் கண்டனம்

ந்தியா எங்கும் தொல்லியல் அகழாய்வு பணிகளுக்கு அனுமதி வழங்கும் கலாச்சார மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் தமிழ்நாட்டை சார்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மக்களவை உறுப்பினரும் , எழுத்தாளருமான சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா முழுக்க தொல்லியல் அகழாய்வு பணிகளுக்கான அனுமதி கொடுக்கும் அதிகாரம் படைத்த CABA கமிட்டிக்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அதில் தமிழகத்தைச்சார்ந்த ஒருவர் கூட இல்லை.
எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்” என்று மத்திய அரசின் இந்த முடிவிற்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்