டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பனை, அவசர அவசரமாக மதுரா சிறைக்கு மாற்றியதற்காக உத்திர பிரதேச அரசின் 5 அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மதுரா மாவட்ட சிறையின் மூத்த கண்காணிப்பாளர் ஷைலேந்திர குமார் மைத்ரே, உத்திரபிரதேச உள்துறை சிறப்புச் செயலாளர்கள் சத்ய பிரகாஷ் உபாத்யாய் மற்றும் குமார் பிரசாந்த், தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, காவல்துறை தலைமை இயக்குனர் ஜெனரல் ஹிடேஷ் சந்திர அவஸ்தி ஆகியோருக்கு சித்திக் கப்பனின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
சித்திக் கப்பனை விடுவிக்கக் கோரி, கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சித்திக் கப்பனுக்கு போதுமான மற்றும் பயனுள்ள மருத்துவ உதவிகளை வழங்கவும், அவரது உடல்நிலை தொடர்பான அனைத்து பிரச்னைகளை சரிசெய்யவும் அதிகாரிக்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், முறையான மருத்துவ சிகிச்சைக்காக சித்திக் கப்பனை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுவதே சரியாக இருக்கும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராசில் நடைபெற்ற வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபேது, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார்.
Source: The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.