குறைந்தபட்ச ஆதரவு விலை இங்கு நடைமுறையில் இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்துள்ள பாரதிய கிசான் சங்க தலைவ்ர ராகேஷ் திகாத், நாட்டில் ”பசியின் மீது வர்த்தகம்” செய்வதை அனுமதிக்க முடியாது எனக் கூறியதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதோடு, குறைந்தபட்ச ஆதரவு விலைகுறித்த சட்டம் என்ற, விவசாயிகளின் கோரிக்கையை மீண்டும் அவர் வலியுறுத்தியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையற்றும்போதும், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பாக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். அப்போது அவர், ”எம்.எஸ்.பி இருந்தது, எம்.எஸ்.பி உள்ளது, எம்.எஸ்.பி தொடரும்” எனக் கூறினார்.
அயோத்தியில் புதிய மசூதி இட வழக்கு: மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
“ஏழைகளுக்குக் குறைந்த விலையில் பொருட்கள் வழங்குவது தொடரும், மண்டிகள் நவீனமயமாக்கப்படும்”, எனத் தெரிவித்த மோடி, விவசாயத் துறையில் சீர்திருத்தங்கள் வேண்டுமென மன்மோகன் சிங் நினைத்ததை, பாஜக நிறைவேற்றி இருப்பதாகவும், அன்றைக்கு ஏற்ற எதிர்கட்சி இன்று எதிர்ப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய, ராகேஷ் திகாத், ”நாட்டின் பசியின் மீது வியாபாரம் செய்ய முடியாது. பசி அதிகமானால், அதற்கேற்ப பயிர்களின் விலையும் தீர்மானிக்கப்படும். பசியின் மீது வியாபாரம் செய்ய விரும்புவோர் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்” எனக் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா – ஒருமனதாக மாநிலங்களவையில் நிறைவேறியது
”விமான பயணத்திற்காக டிக்கெட்டின் விலை, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை மாறுபடும். அதுபோலப் பயிர்களின் விலையைத் தீர்மானிக்க முடியாது” என ராகேஷ் தெரிவித்துள்ளார்.
போராட்டதில் ஈடுபட, புதிய சமூகம் ஒன்று உருவாகி இருப்பதாகத் தெரிவித்த மோடிக்கு பதிலளித்துள்ள திகாத், ”ஆம், இந்த முறை விவசாயிகள் சமூகம் உருவாகி இருக்கிறது, அதற்கு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்” எனக் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
பிணை மறுக்கப்பட்டதை எதிர்த்துக் கௌதம் நவலகா மேல்முறையீடு – தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்
விவசாயிகள் போராட்டத்தைச் சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்த நடக்கும் முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ள திகாத், ”இந்தப் போராட்டம் முதலில் பஞ்சாபின் பிரச்னையாகவும், பின்னர் சீக்கியர்கள் பிரச்னையாகவும், பின்னர் ஜாட்களுடையதாகவும், சித்தரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம், சின்ன விவசாயி, பெரிய விவசாயி என்று எதுவுமில்லை. இது ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்னை” எனத் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.