Aran Sei

இஸ்லாமியர்களின் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது – வி.எச்.பி, பஜ்ரங் தள் மிரட்டல்

குஜராத் நெடுஞ்சாலைகளில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான உணவகங்களில் பேருந்துகள் நின்று செல்வதைக் கண்டால் அதே நெடுஞ்சாலையில் உணவகங்களை நடத்தி வரும் இந்துக்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை உத்தரவு பிறப்பித்துள்ள.

சௌராஷ்டிரா-சூரத் நெடுஞ்சாலையில் உள்ள எனது உணவகத்தில் பேருந்து நின்று செல்வதை அதிலுள்ள சில பயணிகள் புகைப்படம் எடுத்துள்ளனர் என்று அந்த உணவகத்தின் உரிமையாளரான இஸ்லாமியர் ஒருவர் கூறியுள்ளார்.

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

எனது உணவகத்திற்கு உள்ளூர் இந்து தெய்வத்தின் பெயரை வைத்திருப்பதாகவும், சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், இங்கு பணியாற்றும் வேலையாட்களின் யாருக்கும் தாடி கிடையாது, ஏனெனில் நாங்கள் யாரும் இஸ்லாமிய அடையாளங்களைப் பயன்படுத்தாத இஸ்லாமியர்களாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும், எனது உணவகத்தில் குறைந்தது 11 பேருந்துகள் நின்று சென்றிருந்த நிலையில் இன்று எந்த பேருந்துகளும் நிற்பதில்லை. பேருந்தில் பயணிக்கும் சிலர் எனது உணவகத்தை ஒரு இஸ்லாமியர் என்பதைக் கண்டுபிடித்தவுடன், அருகே இந்துக்கள் நடத்தும் உணவகத்தில் பேருந்தை நிறுத்த வேண்டுமென்று ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவின் தொகாடியா நடத்தும் சர்வதேச விஷ்வ ஹிந்து பரிஷத் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் இஸ்லாமியர்களின் உணவகங்களில் பேருந்தை நிறுத்த கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டு வந்துள்ளது.

மாணவிகள் ஹிஜாப் அணிய தடை: காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுகிறது – மெஹபூபா முப்தி விமர்சனம்

அந்த அறிவிப்பில் “இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் தனியார் சொகுசு பேருந்துகள் நிறுத்தப்பட்டால், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சூரத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்த கூடாது என்று பேருந்து ஓட்டுநர்களை, நடத்துநர்களை மிரட்டும் சமூக ஊடக பதிவுகள், சுவரொட்டி பிரச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குஜராத் காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்