Aran Sei

’பெண்களுக்கானது சமையல் அறை’ ட்விட்டரில் பதிவிட்ட பர்கர் கிங் – எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்பு கோரி பதிவு நீக்கம்

ர்கர் கிங்(burger king) நிறுவனம் தனது விளம்பரத்திற்காக வெளியிட்டிருந்த பெண்கள் குறித்த டுவிட்டர் பதிவை நீக்கியுள்ளதாகவும், அதுகுறித்து வருத்தம் தெரிவித்து டுவிட்டரில் மறுபதிவிட்டுள்ளதாகவும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பர்கர் கிங் என்கிற தன்னார்வ நிறுவனம் அமெரிக்க உணவகங்களில் நிலவும் பாலின வேறுபாட்டைக் களைவதற்கும், உணவகங்களில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே டுவிட்டரில் பதிவிட்டிருந்தது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எங்களை மிரட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது’ – டைம் இதழ் அட்டையில் கர்ஜிக்கும் விவசாய பெண்கள்

பர்கர் கிங் நிறுவனம் பெண்களை பெருஉணவுகளில் சமையல் கலைஞர்களாக உருவாக்க அறிவித்திருந்த நிதிஉதவி திட்டத்தை விளம்பரப்படுத்த வெளியிட்டிருந்த ‘பெண்களுக்கானது சமையல் அறை” என்ற ட்விட்டர் பதிவானது எதிர்மறையான விளைவை உண்டாக்கியுள்ளது என்று என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவை நீக்கி அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், பெரும் உணவகங்களில் 20 விழுக்காடு மட்டுமே பெண்கள் சமையர்கலைஞர்களாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எல்லை தாண்டி பயணிக்க அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம்

மேலும் அந்தப் பதிவில், பெரிய உணவகங்களில் பெண் சமையல் கலைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வெளியிட்ட பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, அந்தப் பதிவிற்கு வருந்துகிறோம் என்று அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளதாக என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உணவகங்களில் 24 விழுக்காடு சமையர்கலைஞர்களாக பெண்கள் பணிபுரிவதாகவும், 7 விழுக்காடு மட்டுமே தலைமை சமையல் கலைஞர்களாக பணிபுரிகிறார்கள் என்றும், ஆண்களின் ஆதிக்கமே அங்கு அதிகம் நிலவுகிறது என்றும் அந்தச் செய்தி கூறியுள்ளது.

“பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் இனி உரக்க பேசுவார்கள்” – பிரியா ரமணி

இந்நிலையில்தான் தனது திட்டத்தை விளம்பரப்படுத்த வெளியிட்ட பதிவுச் சர்ச்சையை எழுப்பியுள்ளது என்று என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல 2018 ஆம் ஆண்டு ரஷ்ய பர்கர் கிங் அமைப்பு ”கால்பந்தாட்ட வீரர்களின் கருவைச் சுமக்கும் பெண்ணிற்கு 50,000 டாலர் வழங்கப்படும்” என்று வெளியிடப் பட்ட அந்த ட்விட்டர் பதிவும் நீக்கப்பட்டு, பின் வருத்தம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்