Aran Sei

எங்கள் செருப்புகளை எடுக்கத்தான் அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள் – உமா பாரதி

ரசு அலுவலர்கள் எங்கள் செருப்புகளை எடுக்கத் தான் இருக்கிறார்கள் என்று பாஜகவைச் சேர்ந்தவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் பேசிய காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

அந்தக் காணொளியில்  உமா பாரதி, “உங்களுக்கு தெரியுமா  அரசுப்பணித்துறை என்பது ஒன்றுமே இல்லை. அது  எங்களது செருப்புகளை  எடுக்க உள்ளது. அவர்கள் எங்கள் செருப்புகளை எடுக்கிறார்கள். நாங்கள் அதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “அரசு அதிகாரிகள் தலைவர்களைக் கட்டுபடுத்துவதாக நினைக்கிறீர்களா? இல்லை, முதலில் அவர்கள் தனிப்பட்ட முறையில் பேசுவார்கள். அதன்பின்னரே, அதிகாரிகள்  கோப்புகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். நான் 11 ஆண்டுகாலம் ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளேன். முதலமைச்சராகவும் இருந்துள்ளேன். நாங்கள் முதலில் அதிகாரிகளோடு பேசுவோம் பின்னரே கோப்புகள் நகரும்”. என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  உமா பாரதி பேசியக் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து,  இதுகுறித்து அவரது  ட்விட்டர் பக்கம் வழியே விளக்கம் தெரிவித்துள்ளார்.

Source: THE INDIAN EXPRESS  

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்