Aran Sei

இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த புல்லி பாய் செயலி வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேருக்கு பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று(ஏப்ரல் 12) பிணை வழங்கியுள்ளது.

புல்லிபாய் வழக்கு: பிரபலமான 100 இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டது அம்பலம்

புல்லி பாய் செயலி வழியாகப் பல இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களும் தனிப்பட்ட விவரங்களும் இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றப்பட்டது. அப்பெண்களை அவதூறு செய்து, அவர்களை ஏலத்தில் விடுவதாக அச்செயலியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

புல்லி பாய் செயலி சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட விஷால் குமார் ஜா, ஸ்வேதா சிங் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோருக்கு பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்த புல்லிபாய் செயலி வழக்கு: விஷால் ஜாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தொழில்நுட்ப அறிவு இருப்பதால் அவர்களால் ஆதாரங்களை அழிக்க முடியும் என்று கூறி குற்றவியல் நடுவர் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் முன்னதாக இவர்களுக்குப் பிணை மனுவை மறுத்திருந்தன.

இந்த புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓம்காரேஷ்வர் தாக்கூர் மற்றும் நீரஜ் சிங் ஆகியோரின் பிணை மனுக்கள் பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்னதாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்