Aran Sei

‘எருமைகள், மாடுகள், பெண்கள் என அனைவரும் உ.பியில் பாதுகாப்பாக உள்ளனர்’ – மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான யோகி ஆதித்யநாத்தின் பேச்சு

Credits : The Indian Express

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், எருமைகளோ, காளைகளோ, பெண்களோ யாரையும் வலுக்கட்டாயமாக கடத்த முடியாது எனவும் அனைவரும் பாதுகாப்பாக உணர்வதாகவும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது . ”2017 ஆம் ஆண்டில், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது”  என்பதை மையப்படுத்தி தான் பாஜக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்திருப்பதாக தி ஸ்க்ரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், லக்னோவில் இருக்கும் பாஜக தலைமையகத்தில் கட்சி நிர்வாகிகளிடத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “முன்னர் (கடந்த ஆட்சியில்) நமது பெண்களும், சகோதரிகளும் பாதுகாப்பற்று இருப்பதாக உணர்ந்தனர். முன்னர், மேற்கு உத்தர பிரதேசம் வழியேச் செல்லும், மாட்டு வண்டியில் கட்டப்பட்டிருக்கும், காளைகளும், எருமைகளும் கூட பாதுகாப்பாக இருக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

”ஆனால் தற்போது அந்த சூழல் இல்லை. உங்களுக்கு அந்த மாற்றம் தெரியவில்லையா? இன்றைய தேதியில் எருமைகளோ, காளைகளோ, பெண்களோ யாரையும் வலுக்கட்டாயமாக கடத்த முடியாது? இதுதானே மாற்றம்? உத்தர பிரதேசத்தின் அடையாளம் என்ன? எங்கெல்லாம் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்குமோ, எங்கெல்லாம் இருள் சூழ்ந்து இருக்குமோ, எங்கு ஒரு நாகரிகமான மனிதன் இரவில் சாலையில் நடக்க அஞ்சுகிறானோ அது தான் முன்னர் உத்தர பிரதேசமாக இருந்தது?  ஆனால் அந்த நிலை தற்போது இல்லை” என்று கூறியுள்ளார்.

 

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் : சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

இந்துக்களுக்கு செல்ல வேண்டிய ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் தின்று செரித்து விட்டனர் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்