புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் ஜாவுக்கு பிணை வழங்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது.
புல்லி பாய் செயலி வழியாக பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களும் தனிப்பட்ட விவரங்களும் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது. அப்பெண்களை அவதூறுக்கு உள்ளாக்கும் முயற்சியாக, அவர்களை ஏலத்தில் விடுவதாக அச்செயலியில் அறிவிக்கப்பட்டது. இச்செயல் நாடு முழுவதும் கடும் கண்டனத்தை எழுப்பியது.
இது தொடர்பாக மும்பை காவல்துறை வழக்கு பதிந்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம், விஷால் ஜா என்பவரை மும்பை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட விஷால் ஜா பிணைக் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, அவரின் முதல் பிணை மனுவை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 28), மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வின் நீதிபதி எஸ்.ஜே. காரத் முன் விஷால் ஜாவின் இரண்டாவது பிணை மனு விசாரணைக்கு வந்துள்ளது. விஷால் ஜாவுக்கு பிணை வழங்க மறுத்துள்ள நீதிபதி, அப்பிணை மனுவை நிராகரித்துள்ளார்.
Source: PTI
தொடர்புடைய பதிவுகள்:
இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: ஆர்எஸ்எஸ்தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.