Aran Sei

டெல்லி: இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த வழக்கில் இருவருக்கு பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்

புல்லி பாய்’ செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிராஜ் பிஷ்னோய் மற்றும் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் ஆகியோருக்கு மனிதாபிமான அடிப்படையில் டெல்லி நீதிமன்றம் நேற்று (மார்ச் 28) பிணை வழங்கியுள்ளது.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதல் முறை குற்றவாளிகள் என்பதால், அவர்கள்  தொடர்ந்து சிறையில் இருப்பது அவர்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் கேடு விளைவிக்கும்” என்று நீதிமன்றம் கருதுவதாக தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இருவரும் எந்த சாட்சியையும் அச்சுறுத்தவோ அல்லது ஆதாரத்தையும் சீர்குலைக்கவோ முடியாத வகையில், கடுமையான நிபந்தனைகளை அவர்களுக்கு நீதிமன்றம் விதித்துள்ளது.

புல்லிபாய் வழக்கு: பிரபலமான 100 இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டது அம்பலம்

பாதிக்கப்பட்ட எவரையும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்பு கொள்ள கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

“குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆதாரங்களை அழிக்கக் கூடாது. தனது தொடர்பு விவரங்களை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும். மொபைல் போனை அனைக்காமல் சுவிட்ச் ஆன் செய்து வைக்க வேண்டும். தனது இருப்பிட விவரங்களை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நாட்டை விட்டு வெளியேற கூடாது. ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். பிணையில் இருக்கும்போது இதுபோன்ற குற்றங்களைச் செய்யக் கூடாது” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புல்லி பாய் செயலியில் போலி பெயர்கள்: ‘இஸ்லாமியர், சீக்கியர்களிடையே வகுப்புவாத பிரச்சினை உருவாக்க சதி’ – காவல்துறை

புல்லி பாய் செயலி வழியாக பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களும் தனிப்பட்ட விவரங்களும் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது. அப்பெண்களை அவதூறுக்கு உள்ளாக்கும் முயற்சியாக, அவர்களை ஏலத்தில் விடுவதாக அச்செயலியில் அறிவிக்கப்பட்டது. இச்செயல் நாடு முழுவதும் கடும் கண்டனத்தை எழுப்பியது.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்