Aran Sei

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசரால் இடிக்கும் நடைமுறை – உ.பி.,யை அடுத்து ம. பி., யிலும் தொடரும் பாஜக

Credit: NDTV

குற்றங்களை தடுப்பதாக காரணம் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடைமுறையை உத்திரபிரதேசத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் பாஜக பின்பற்ற தொடங்கியுள்ளது.

உத்திரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடைமுறையால் உத்திரபிரதேசத்தில் குற்றங்கள் குறைத்துள்ளது. இந்த நடைமுறை சமாஜ்வாதி கட்சியால் கேலிக்கூத்தாக பார்க்கப்பட்டது. ஆனால், இது தற்போது பாஜகவின் தேர்தல் அகராதியில் இடம்பெற்றுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

புல்டோசர் நடைமுறையைக் கௌரவ நடைமுறையாக பாஜக பயன்படுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷின் தந்தை முலாயம் சிங்தான் பாஜக பி டீம், பகுஜன் சமாஜ் கட்சி அல்ல – மாயாவதி பதிலடி

“புல்டோடர் பாபா (யோகி ஆதித்யநாத்), புல்டோசரை கொண்டு வந்தார், மாஃபியாக்கள் புதைக்கப்பட்டனர். இன்றைக்கு முக்தர் அன்சாரி போன்றவர்கள் புல்டோசர் வந்துவிடும் என அஞ்சுகிறார்கள்” என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புல்டோசருடன் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இருப்பது போன்ற பதாகைகள், தலைநகர் போபாலின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராமேஷ்வர் சர்மாவின் சார்பில் இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

”சகோதரிகள் மற்றும் மகள்களை அவமதிக்க துணியும் எவருடைய வீட்டையும் புல்டோசர் தட்டும், மகள்களின் பாதுகாப்பிற்கு தடையாக இருப்பவர்களுக்கு, மாமாவின் புல்டோசர் சுத்தியலாக இருக்கும்” என்ற வாசகம் பதாகைகளில் இடம்பெற்றுள்ளது.

‘ஹர ஹர மோடி’ – பிரதமர் மோடியொரு சிவ அவதாரமென ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ புகழாரம்

கடந்த 72 மணி நேரத்தில் சியோனி, ஷியோபூர், ரைசன், ஜௌரா, சஹ்டோல் மாவட்டங்களில் கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர்: கூட்டுப்பாலியல் செய்யப்பட்ட பட்டியலின பெண் – குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேர் கைது

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ராஜஸ்தான், உத்திரபிரதேசத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் 2,339 வழக்குகளுடன் 3 வது இடத்தில் உள்ளது.

மாநிலத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 6 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்