Aran Sei

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – விவசாயிகள், எல்லைப் பிரச்சினை, பெகசிஸ் குறித்து பேச காங்கிரஸ் திட்டம்

பெகசிஸ் ஸ்பைவேர் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை மற்றும் கிழக்கு லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்புகள் போன்ற விவகாரங்களை நாளை(ஜனவரி 31) தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்கள் மத்திய ஹால் பகுதியில் ஒன்றுக்கூட்டப்பட்டு, அவர்கள் முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இந்த அமர்வு தொடங்கவுள்ளது

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாளையும், ஒன்றிய பட்ஜெட்டை நாளை மறுநாளும் தாக்கல் செய்ய உள்ளார்.

‘பெகசிஸ் உளவு செயலியை வாங்கிய இந்திய அரசு’ – விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் புதன்கிழமை முதல் நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 7ஆம் தேதி அவ்விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு என பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளை ஆய்வு செய்யப்படும். மார்ச் 14ஆம் தேதி மீண்டும் அமர்வு தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடையும்.

பெகசிஸ் விவகாரம்: ஜனநாயக அமைப்புகளை உளவு பார்க்கும் மோடி அரசு; இது தேசத்துரோகம் – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பரப்புரைகளுக்கு இடையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

விவசாயிகள் பிரச்சனை, சீன ஊடுருவல்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமன விதிகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள், பெகசிஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்புப் பிரச்சினைகள் போன்றவை இந்த அமர்வில் எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இப்பிரச்சனைகளை இந்த அமர்வில் எழுப்ப முடிவு செய்துள்ளன.

Source: PTI

பெகசிஸ் செயலி குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள அரண்செய் சிறப்பிதழை (உளவுக்குதிரை) படிக்கவும். இணைப்பு கீழே.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்