Aran Sei

மத்திய பட்ஜட்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டம் – விவசாயிகள் போராட்டம்தான் காரணமா?

ரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.” என்று அவர் அறிவித்துள்ளார்.

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

’எல்ஐசி உள்ளிட்ட அரசு நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்க இலக்கு’ – நிர்மலா சீதாராமன்

விவசாய விளைப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த இ-நாம் திட்டத்தின் கீழ், இணைய வழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

விவசாய துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள விவசாய உற்பத்தி விற்பனை மையங்கள் வழியாகக் கடன் வசதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது பல்வேறு மாநிலங்களில் நிலவும் உற்பத்தி விலையை ஒப்பிட்டால் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் “இதன் விளைவாகப் பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களும் நடப்பு சம்பா பருவத்திற்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை என்றும் அந்தந்த மாநிலங்களின் உற்பத்தி நிலைக்கேற்ப அதை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளன”என்றும் தி வயர் இணையதளம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய அரசு கொண்வந்த வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். போராட்டத்தின் எதிரொலியாக 18 மாதங்கள் சட்டம் அமலுக்கு வராது என்று மத்திய அரசு பின்வாங்கியது நினைவுகூரத்தக்கது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்