Aran Sei

‘இந்து வெறுப்பு’ இருப்பதை உலகநாடுகள் அங்கீகரிக்க வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்திய தூதர் வலியுறுத்தல்

டந்தாண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நாவின் சமீபத்திய உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தி, குறைபாடுகள் நிறைந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் உள்ளது என்றும் பயங்கரவாத எதிர்ப்பு தீர்மானங்களில் வலதுசாரி தீவிரவாதம், தீவிர தேசியவாதம் ஆகியவற்றைச் சேர்ப்பதற்கு எதிராகவும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

பௌத்தம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான வெறுப்புச் செயல்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் இந்து மதத்திற்கு எதிரான வெறுப்பை  ‘இந்துபோபியா’ என்று  ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என்றும் திருமூர்த்தி கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தின் வரையறையில் “தீவிர தேசியவாதம்” மற்றும் “வலதுசாரி தீவிரவாதம்” போன்ற சொற்கள் சேர்க்கப்படக் கூடாது, ஏனெனில் அவை பயங்கரவாதத்தை “நீர்த்துப்போக” செய்கிறது என்று திருமூர்த்தி கூறியுள்ளார்.

ம.பி. காவல்துறையில் அலுவல் மொழியாக இந்தி – பிற மொழிகளுக்குத் தடை விதித்த பாஜக அரசு

“கடந்த 2 ஆண்டுகளில், ஐநாவின் பல உறுப்பு நாடுகள், தங்கள் அரசியல், மதம் மற்றும் பிற உள்நோக்கங்கள் காரணமாக, இனரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாதம், தீவிர தேசியவாதம், வலதுசாரி தீவிரவாதம் போன்ற பெயர்களில் பயங்கரவாதத்தை முத்திரை குத்த முயல்கின்றன. இந்த போக்கு ஆபத்தானது,” என்று  திருமூர்த்தி கூறியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் ஏற்பாடு செய்த மெய் நிகர் மாநாட்டில் சிறப்பு உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2021 ஜூனில் ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட “உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியின்” 7வது மதிப்பாய்வில் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதங்களுக்கு எதிரான மதவெறி மட்டுமே பெயரிடப்பட்டுள்ளன என்பதை திருமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து விரோதம், பௌத்த எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்புகள் தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என்றும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஐ.நா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளின் கவனமும் தேவை என்றும் திருமூர்த்தி கூறியுள்ளார்.

இந்தியாவின் “வலதுசாரி” சித்தாந்தத்தைப் பற்றிப் பல மேற்கத்தியப் பத்திரிகைகளின் சமீபத்திய விமர்சனங்களில் “அச்சுறுத்தல்கள்” என்று அழைப்பது தவறானது” என்றும் அவர் கூறியுள்ளார்..

‘தேசத் துரோக’ சட்டத்தை அகற்ற இதுவே நேரம் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நரிமன்

“ஜனநாயகத்தில், வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் அரசியலின் ஒரு முதன்மையான அங்கமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் தேர்தலின் மூலம் அவர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்கள்.  ஜனநாயகம் என்பது பரந்து விரிந்த கருத்தியல்கள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று திருமூர்த்தி பேசியுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கெடுக்கும் விவசாயிகள் சங்கம்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

“தீவிரவாதிகள் தீவிரவாதிகள்தான். அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் இதற்கு மாறாக அவர்களில் நல்லவர்களும் உள்ளார்கள் என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு, ஒரு உள்நோக்கம் உள்ளது. இந்த உண்மையை மூடிமறைப்பவர்களும் குற்றவாளிகள்தான்” என்று ஐக்கிய நாடுகளின் சபைக்கான இந்தியத்தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்