Aran Sei

‘பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா’ – முதல் தகவல் அறிக்கையை பதிய சொல்லிய எல்லை பாதுகாப்பு படையினர்

பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யமாறு எல்லை பாதுக்காப்பு படையினர் (பிஎஸ்எஃப்) தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக சட்ட விளக்கங்களை பஞ்சாப் காவல்துறையினர் கேட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ரோராவாலா கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரர் மீது அந்தப் புறா வந்து அமர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் அந்தப் புறாவின் காலில், தொர்பு கொள்ள வேண்டிய எண் என ஒரு எண் எழுதப்பட்ட சிறு காகிதம் கட்டப்பட்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘தமிழக அரசின் அனுமதியின்றி ஆக்ஸிஜனை பிற மாநிலத்திற்கு வழங்கிய மத்திய அரசு’ – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

பஞ்சாப் காவல்துறையினரிடம் புறாவை ஒப்படைத்த பிஎஸ்எஃப் அதிகாரி, புறா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

புறா மீது முதல் தகவல் அறிக்கை பதியுமாறு, எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் துருவ் தாஹியா தெரிவித்துள்ளார்.

8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு – சுகாதாரத்துறை அழைப்பால் சர்ச்சை

“புறா ஒரு பறவை என்பதால், முதல் தகவல் அறிக்கை பதிய முடியாது என நினைக்கிறேன். இருப்பினும் இது தொடர்பான சட்ட விளக்கங்களை கோரியுள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த காகிதத்தில் இருக்கும் எண் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும், தற்போது இந்தப் புறா கான்கார்க் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் துருவ் தாஹியா தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்